அச்சமென்பது அச்சம்தான்! மோடியால் வந்த மூச்சடைப்பு?

சிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் இப்பவும் எவர்கிரீன்தான். இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திருந்த அத்தனை பேருக்கும் பஸ்சை பத்தே வினாடியில் தவறவிட்ட அதிர்ச்சி! இருக்காதா பின்னே?

படம் பார்க்க மனசிருந்தும், பர்சை திறந்தால் காத்துதானே வருது ?! எல்லாம் பிரதமர் மோடியின் கைங்கர்யம். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டையும், சிந்தாதிரிப்பேட்டை கருவாடு மார்க்கெட்டையும் ஒண்ணுமில்லாமல் ஆக்கிவிடும் போலிருக்கிறது பேங்க் மற்றும் ஏடிஎம் வாசலில் நிற்கிற கூட்டம். சட்டை கசங்கி சைடு பட்டன் கிழிந்து வெளியே வந்து அன்றாட சோற்றுக்கு இலை வாங்குவதா, அச்சமென்பது படத்துக்கு போவதா என்றால், யார் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதை பளிச்சென்று சொல்லிவிடலாமே?

அப்படிதான் தமிழ் நாட்டில் பாதி தியேட்டர்களை ஈயாட விட்டுவிட்டார் மோடி. இதில் பெரிதும் அடி வாங்கிவிட்டதாம் ‘அச்சமென்பது மடமையடா’. போட்டிக்கு பெரிய படங்கள் ஏதுமின்றி வெளியான அச்சமென்பது மடமையடா, ஒரு போட்டியும் இல்லாத நிலையிலேயே நிலை குலைந்து போயிருப்பதுதான் பேரதிர்ச்சி. சிம்பு, ரஹ்மான், கவுதம் மேனன் கூட்டணிக்கு முதல் நாள் கலெக்ஷன் 4 கோடி ஆகுமாம். ஆனால் இப்போதைய வசூல், வெறும் 2 கோடியே 68 லட்சம்தான்.

நாட்ல இருக்கிற எல்லா ஏடிஎம் மும் புல் ஆனால்தான் கவுதம் மேனன் பாக்கெட்டும் புல் ஆகும் போலிருக்கு.

மொசுக்கட்டை இப்படி மோடி வடிவிலா வந்து கடிக்கணும்?

To listen Audio Click Below:-

https://youtu.be/kBXnxhbvbXM

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹீரோயினாகும் கவுதமி மகள்! கைகொடுக்கும் ஹீரோ?

“இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி?” என்று கமல் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! பலரும் எதிர்பார்த்தபடியே தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்துவிட்டாராம் கவுதமி. 13 ஆண்டுகள்...

Close