விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்! கடுப்பில் கவருமென்டு!

‘டைம் டூ லீட்’ என்று ஒரு சப் டைட்டில் போட்டதற்கே படாத பாடு பட்டார் விஜய். அது ஒரு கொடுங்கோல் காலம் என்று விஜய் ரசிகர்கள் ஆதங்கப்பட்டாலும், பிற கட்சியினரும் கூட அந்த கொடுங்கோலுக்கு பொட்டு வைத்து பூ போட்டு ஆராதித்தார்கள். கரீஷ்மா வழியும் நடிகர் ஒருவர், கை நிறைய ரசிகர்களோடு அரசியலுக்கு வந்தால் முதலில் தங்கள் கோமணம்தான் உருவப்படும்! இந்த அச்சம் எல்லா கட்சிகளுக்கும் வந்ததன் விளைவுதான் அது.

ஜெ இல்லாத தமிழகம், கண்ட குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகிற குப்பைத் தொட்டி போலாகிவிட்டது. அவர் ஒரு காவல் தெய்வமாக இருந்தார் என்பதை நீட், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்ற அடாவடிகளின் மூலம் அறிவார்கள் மக்கள். இன்று இருக்கிற தலைமைக்கு அந்த கெப்பாசிடி துளியும் இல்லாமல் போனதன் ரிசல்ட்டைதான் அன்றாடம் பார்க்க முடிகிறதே?

இந்த நேரத்தில்தான் சினிமாவில் ஸ்டன்ட் அடிக்கும் பல ஹீரோக்கள், நிஜ வாழ்விலும் முஷ்டியை உயர்த்தி நித்திரையை கலைக்கிறார்கள். குறிப்பாக ஆளுங்கட்சிக்கு இதனால் கடும் டென்ஷன். நாளை வெளியாக இருக்கும் சர்கார் படத்தை வரவேற்று விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர், ஆளுங்கட்சியை கர் புர்… ஆக்கியிருக்கும் இந்நேரம்.

முன்னாள் முதல்வர்களின் போட்டோக்கள் வரிசையாக இருக்கிறது.பக்கத்திலேயே விஜய் முஷ்டியை உயர்த்தியபடி ஒரு ஸ்டில். இன்னொரு பக்கம் வாக்காளனின் ஒரு விரல் குளோஸ் அப்பில் இருக்கிறது. அதில் ஓட்டுபோட்ட மையின் அடையாளம்! ‘எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது’ என்கிற வாசகத்தையும் அச்சிட்டிருக்கிறார்கள். நாளைய தமிழகம் நாங்கதான்யா… என்கிற தொணி அதில் தெறிக்கிறது. ஆர்வம் மிகு ரசிகர்களின் ஆசையாக இது இருந்தாலும், இந்த போஸ்டர் ஆளுங்கட்சிக்கு பெருத்த எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இதன் விளைவாக நாளை வெளியாகும் சிறப்பு காட்சிகள் குறித்த நேரத்தில் துவங்குமா? பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் ரேட்டுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்றெல்லாம் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால் குதிரையை அவிழ்த்துவிட்டு லாயத்தை பூட்டுவது போல, ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 2000 ரூபாய் வரைக்கும் விற்று தீர்ந்த பின் லாயத்தை பூட்டி என்ன பலன்?

ம்… அவரவர் சர்கார் அவரவருக்கு. விஜய்யின் சர்கார் பிளாக் டிக்கெட் சர்கார் போல!

1 Comment
  1. இளையராஜா says

    சும்மா உடுறான் கப்ஸா. அப்பாவி ரசிகர்களுக்கு, இவனே காசு கொடுத்து இவ்வாறு செய்ய சொல்லுகிறான். விஜய் ஒரு கேவலமான ஜந்து….
    தனது பட டிக்கட்டை அதிக விலைக்கு விற்பனை செய்ய தடை செய்ய படுமா ??? திரை அரங்கில் வைக்கப்படும் பேனர் கட் அவுட்டிற்கு தடை விதிக்க வேண்டும். விஜய் ரசிகர்களே சர்க்கார் படம் தோல்வி படமாக தான் இருக்கும் என கூறி வருகிறார்கள். எனவே சர்க்கார் படத்துக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இல்லை.இதுவே படம் தோல்வி தான் என்பதற்கு சான்றும் கூட.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்து வருஷம் கழித்தும் அதே ஜோதிகா!

Close