கமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்! ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே!

திரைக்குப் பின்னால் உலகமே வியக்குற ரஜினியா வேணா இருக்கட்டும், அதுல இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா திரையில் தோன்றுகிற கொட்டாச்சியா இருந்தாக் கூட போதும் என்று நினைப்பதுதான் நடிப்பு பசி. அந்தப் பசி தினமும் ஏழு வேளையும் இருக்கும் போலிருக்கிறது ஸ்டன்ட் சிவாவுக்கு.

கமல், அஜீத், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் ஸ்டன்ட் சொல்லிக் கொடுத்து அடிக்கவிட்டவர் சிவா. இன்னும் சொல்லப் போனால், பாலாவின் சேது, பிதாமகன், நந்தா மாதிரியான டாப் கிளாஸ் பைட் படங்களிலெல்லாம் யதார்த்த சண்டையை காட்டியவரும் இந்த சிவாதான். அப்படிப்பட்டவருக்கு, “நாமளும் திரையில் தோன்றி நடிச்சா எப்படியிருக்கும்?” என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அதை கரெக்ட்டாக கேட்ச் பண்ணி விட்டார் விஜய் மில்டன்.

கோலிசோடா 2 படத்தில் வரும் சீமராஜா என்கிற சாதி சங்கத் தலைவர் கேரக்டரில் நச்சென்று பொருத்திவிட்டார் ஸ்டன்ட் சிவாவை. நாலாபுறத்திலிருந்தும் பாராட்டுகள் குவிய குவிய, ஆக்ஷன் முகத்தில் வெட்கம் வழிய பேச ஆரம்பிக்கிறார் சிவா.

“வேட்டையாடு விளையாடு படத்தில்தான் முதன் முதலில் நடிச்சேன். ஒரு ஆக்ஷன் காட்சியில் கமல் சார் நெற்றியில் துப்பாக்கியை வைக்கணும். ஃபைட்டருக்கு சொல்லிக் கொடுத்தேன். அதை கவனிச்சிட்டு இருந்த கவுதம்மேனன், நீங்க பண்றதே நல்லாயிருக்கு. அந்த சீன்ல நீங்களே நடிச்சுருங்கன்னு சொன்னார். அப்படியே ஆகாயத்துல மிதக்க ஆரம்பிச்சுட்டேன். நடிப்பு ஆசை மனசில் இருந்தாலும், யாராச்சும் கூப்பிடுவாங்களான்னு காத்திருந்தேன். அப்பதான் விஜய் மில்டன் என்னை போன்ல கூப்பிட்டு, ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்கிறீங்களான்னு கேட்டார். சரின்னுட்டேன்” என்றார்.

“வரச்சொல்லிட்டோம்… ஆனா எப்படி நடிப்பாரோன்னு ஒரு அச்சம் மட்டும் மனசுல இருந்திச்சு” என்று தொடர்ந்தார் விஜய் மில்டன். “போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுதான் முதல் காட்சி எடுத்தோம். பேசிகிட்டே வந்து அப்படியே அந்த ஹீரோவே கொத்தா பிடிச்சு தூக்கிட்டாரு. நான் சொல்லிக் கொடுக்காமலே அவர் செஞ்ச அந்த விஷயம் சூப்பரா இருந்திச்சு. நாம சரியான ஆளைதான் வரவழைச்சுருக்கோம்னு அப்பதான் நினைச்சேன்” என்றார்.

ஊருக்கே பாடம் எடுக்குற வாத்தியாரு, ஒண்ணாம்பு பெஞ்சுல ஒட்கார்ந்து பாடத்தை கவனிக்கிற மாதிரி, நடிக்க வந்திருக்கார் ஸ்டன்ட் சிவா.

நம்பி கேரக்டர் ரோல் கொடுத்தால், ஸ்டன்ட் டைரக்ஷன் ஃபிரீன்னு ஆஃபர் கொடுப்பாரோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்!

https://www.youtube.com/watch?v=1WV74n47rrg&t=513s

Close