சிம்புவால மட்டும்தான் முடியுமா? ஜி.வி.பிரகாஷுக்கும் ஆசை!
மந்த்ரா பேடியாக இருக்கட்டும்… மல்லிகா ஷெராவத்தாக இருக்கட்டும்… ஆன்ட்டிகளின் பிரைவசிக்குள் அநாவசியமாய் நுழைந்து உரிமயோடு கால்ஷீட் கேட்பார் சிம்பு. “சரத்குமாரோட ஹீரோயின்ப்பா. ஆறு மாசம் விட்டா அதுவே ஆன்ட்டியாகிடும்” என்று நயன்தாரா குறித்து கருத்து வைத்திருந்த தமிழ்சினிமாவை, ஒரே புரட்டலாக புரட்டிப் போட்டு நயன்தாரா பீவருக்கு வழி வகுத்தவரே சிம்புதான். அவர் மட்டும் தன்னை விட மூத்தவரான நயன்தாராவுடன் அன்று ஜோடி சேராமல் விட்டிருந்தால், சரத்குமார், மம்முட்டி, பாலகிருஷ்ணா என்று பரதேசம் போயிருந்திருப்பார் நயன்.
சிம்புவின் முயற்சி சானியா மிர்சா வரைக்கும் சென்றதை நாடு அறியும். நல்லவேளை… அவர் கல்யாணம் ஆகி சென்றுவிட்டார். சரி… விஷயத்துக்கு வருவோம். மந்த்ராபேடியை தன் மன்மதன் படத்தில் நடிக்க வைத்து, எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்தாரல்லவா? அதே சிம்புவை போல, தானும் ஒரு அட்டம்ப்ட் பண்ணுவோமே என்று நினைத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘அடங்காதே’ படத்தில் மந்த்ராவுக்கு ஒரு ரோல் கொடுக்கப் போகிறார். பேச்சு வார்த்தைகள் பரபர…
To listen audio click below :-