இதுக்கெல்லாம் வர மாட்டாரா எச். ராஜா?
‘வைரமுத்துவின் வாய்க்கு பூட்டு போடாமல் ஓய மாட்டேன்’ என்று திண்டுக்கல் பூட்டோடு திரிந்த எச்.ராஜா, அதற்கப்புறம் அவரே நீதிமன்றத்தை விமர்சித்து அதே பூட்டை எடுத்து தன் வாயில் மாட்டிக் கொண்ட கதை தனி சுவாரஸ்யம். இப்படி நாட்டுக்குள் நடக்கும் நல்லது கெட்டதுகளை ‘விட்டேனா பார்…’ என்று விடைத்துக் கொண்டு சீண்டுகிற ராஜாவுக்கு வசமாக ஒரு விஷயம் சிக்கிவிட்டது.
ஆனாலும் மனுஷன் ஆல் டைம் பூட்டுக்கு ஆர்டர் கொடுத்தது போலவே அமைதி காப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.
விஷயம் இதுதான். சில தினங்களுக்கு முன் அஜீத் பிறந்த நாளுக்கு சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தார் நடிகர் நடிகைகளுக்கு டேட்ஸ் பார்க்கும் மேனேஜரான தேவி ஸ்ரீ தேவி சதீஷ். அதில், அஜீத்தை பகத்சிங் போல உருமாற்றி போட்டோ ஷாப் செய்திருந்தார். பகத்சிங் வேடத்தில் அஜீத் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அப்படியிருக்க… ஒரு விடுதலை போராட்ட வீரனை கொச்சை படுத்துவது நியாயமா? அந்த போஸ்டர் குறித்து ஏன் இவர் பேசவில்லை? என்றெல்லாம் முணுமுணுப்பு கேட்டு வருகிறது கோடம்பாக்கத்தில்.
இந்த போஸ்டருக்கும் அஜீத்திற்கும் துளி சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களாக இப்படி போஸ்டர் ஒட்டி வரும் சதீஷுக்கு அஜீத் நன்றி கூட சொன்னதில்லையாம். இந்த முறையும் இப்படியொரு போஸ்டர் வந்ததாகவோ, அதை தான் பார்த்ததாகவோ காட்டிக் கொள்ளவே இல்லை அஜீத்.
அஜீத்தே விலகிப் போனாலும் ஆர்வ கோளாறு காரணமாக இப்படி அவரை வம்பில் மாட்டிவிடும் சதீஷ்களை என்ன செய்வது? அதைவிட இப்படியெல்லாம் தேச தலைவர்களை கொச்சை படுத்துகிற செயலை கண்டும் அமைதியாக இருக்கும் எச்.ராஜாக்களை என்ன செய்வது?
பாரத் மாத்தாக்கீ ஜே…!
நீ ஒரு அஜித் ஜால்றா டா .