உங்களுக்கு பேட்டி கிடையாது! பிரபல தொலைக்காட்சிக்கு பெப்பே காட்டிய ஹன்சிகா?

ஒரு படத்தை எடுத்து அதை ஓட வைப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டையில் சுளுக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை! நாலாபுறத்திலும் நசுக்கலும் பொசுக்கலுமாக இருக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ ஹீரோயின்களே தலைவலியாக இருந்து தொலைப்பதுதான் இம்சையிலும் இம்சை! அப்படியொரு இம்சைதானா? அல்லது ஜீவ காருண்யத்தின் அளவே அவ்ளோதானா என்று தெரியவில்லை. ‘உயிரே உயிரே’ பட பிரமோஷனுக்காக வந்த ஹன்சிகா முகத்தில் எல்லை மீறிய பயங்கரவாதம்! (மேடையில நல்லா சிரிச்சுதானேய்யா பேசிட்டு இருந்தாரு என்று வீடியோவை பார்த்தவர்கள் சண்டைக்கு வந்தாலும், மேடைக்கு கீழே சுள் சுள் ஹன்சிகாவாக இருந்ததை எப்படி அறிவார்கள்?) இந்த படத்தை நடிகை ஜெயப்ரதா தயாரிக்க, ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

ஒரு முன்னணி இரண்டெழுத்து தொலைக்காட்சி நிருபர்தான் செம டென்ஷன் ஆனார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவரை அல்லாடவிட்ட ஹன்சிகா, இப்ப அப்ப என்று இழுத்தடித்துக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன அவர், “இந்தம்மாவோட(?) பேட்டியே வேணாம். நான் கிளம்புறேன்” என்று கிளம்பியே விட்டார். அதற்கப்புறம் அவரை சமாதானப்படுத்தி இரண்டு வார்த்தைகள் பேச வைத்து அனுப்பினார்கள்.

சரி போகட்டும்… ஏனிந்த பாராமுகம் ஹன்சிகா? வேறொன்றுமில்லை, போக்கிரி ராஜா படத்தின் பிரமோஷனுக்கு வராமல் தவிர்த்தன் மூலம், எல்லா படங்களுக்குமே அப்படியொரு நிலையை ஏற்படுத்திவிட வேண்டும் என்றுதான் நினைத்தாராம் அவர். இந்த படத்தின் பிரமோஷனுக்கு வரவும் அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த படத்தில் அவரை கமிட் பண்ணும்போதே, பிரமோஷன்களுக்கு வர வேண்டும் என்று எழுதி கையெழுத்து வாங்கிவிட்டார்களாம். அதனால்தான் வந்திருக்கிறார். வந்தது போலவும் இருக்க வேண்டும். வளைந்து வளைந்து வேலை பார்க்காமலும் இருக்க வேண்டும். இரண்டையும் செய்து முடித்துவிட்டார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மூன்றரை லட்சம் பாக்கி! ஹீரோவை மன்னிக்குமா கிஷோரின் ஆத்மா?

இருக்கும் போதும் புகழ், இறந்த பின்பும் புகழ், என்று வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? அதை கொள்ளை கொள்ளையாக பெற்றிருப்பவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எடிட்டர்...

Close