இதென்னடா ஓவியாவுக்கு வந்த சோதனை?

மேலேயிருக்கும் படத்தை பார்த்தாலே தெரிந்திருக்கும். ஓல்டு நடிகர் சரவணன் ஓவியாவை லவ்ஸ் விடுகிறார் என்பது. நிச்சயம் இது கனவுக்காட்சியாக இருக்கும். அல்லது நிஜ காட்சியாக இருந்தால்தான் என்னவாம்? போகட்டும்… இப்படியொரு சுவாரஸ்யமான அதிர்ச்சி எந்த படத்தில்?

இயக்குனர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ., பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவர் ராஜதுரை . பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீனி.’

‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ எனும் பேனரில் மதுரை.ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ‘ சீனி’ திரைப்படத்தில் அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன் முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் ‘யு’ சர்டிபிகேட் வழங்கியிருப்பதுடன ‘சீனி’ தரமான படம் என., அதன் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வத்தையும் , இயக்குனர் ராஜதுரையையும் அழைத்து பாராட்டும் தெரிவித்திருப்பதில் மேற்படி படத்தயாரிப்பு மற்றும் இயக்குனர்தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது!

‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிபெண் நிருபராக வரும் ஓவியாவுடன்., சஞ்சய், பரத்ரவி , ராதாரவி , செந்தில் , ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா உள்ளிட்ட ஒருபெரும் காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ‘ சீனி’ படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும், பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது!

‘சீனி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன் , விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா , பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர். , சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட் பாபு , படத்தொகுப்பு – சாய் சுரேஷ், ஒளிப்பதிவு – நாகராஜன் , தயாரிப்பு மேற்பார்வை – ராஜா , தயாரிப்பு – மதுரை ஆர்.செல்வம் , எழுத்து, இயக்கம் – ராஜதுரை . இத்தனை சிறப்புகளுடனும் 2015-ம் ஆண்டின் இறுதியில், சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் ,தரமான படமெனும் பாராட்டு பத்திரத்துடனும் ., ‘வேலம்மாள்’ சினிகிரியேஷன்ஸ் பேனரில் 2016 – புத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் திரைக்குவருகிறது ‘சீனி ‘

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாலை நேரத்து மயக்கம் விமர்சனம்

நடமாடும் ‘மைண்டு’ வைத்தியராக இருந்து, தள்ளாடும் குடும்ப வாழ்க்கைக்கு புத்தி சொல்லியிருக்கிறார் செல்வராகவன்! சினிமா துறைக்கு வராமல் ஒழுங்காக படித்திருந்தால், இந்நேரம் நகரத்தின் முக்கிய ‘சைக்காட்ரிக்’ மருத்துவராக...

Close