ஹாலிவுட்ல குறும்படம் தமிழ்நாட்ல நெடும் படம்! விழி மூடி யோசிக்க வைத்த புதுமுகம்

தமிழ்சினிமாவுக்கு ஒரு புது ஹீரோ கிடைச்சாச்சு. அதே நேரத்தில் தமிழ்சினிமாவுக்கு ஒரு புது இயக்குனரும் கிடைச்சாச்சு. அப்புறம் அவரே அந்த படத்தையும் தயாரித்திருப்பதால், ஒரு புதுமுக தயாரிப்பாளரும் கிடைச்சாச்சு! ஓ… அவரே நடிச்சு, அவரே இயக்கி, அவரே தயாரிச்சிருக்கார். அம்புட்டுதானே… ? என்று அலட்சியமாக கடந்துவிட முடியாது செந்தில்குமரை சந்தித்தால். சொந்த ஊர் திருப்பூர். கைநிறைய வசதி என்று வாழ்க்கை சுபிக்ஷமாக போய் கொண்டிருந்தாலும், சினிமா வா வான்னு கூப்பிட்டால் என்னதான் பண்ணுவார்? தன் ஆர்வத்தை அப்படியே அமெரிக்காவுக்கு கடத்திக் கொண்டு போய்விட்டார். ‘அங்கே ஹாலிவுட்ல சினிமா தொடர்பா எந்த வேலை கொடுத்தாலும் செய்ய ஆரம்பிச்சேன். கிட்டதட்ட ஒரு வருஷம். அங்கேயே பல குறும்படங்கள் இயக்கினேன். நிறைய விருதுகள் வாங்கினேன்’

‘பேக் டூ திருப்பூர். நான் எடுக்கப் போற முழு நீள சினிமா தமிழ்லதான் இருக்கணும் என்பது கனவு. லட்சியம். 2009 ல் ஒரு கதையை உருவாக்கி அதை ஒவ்வொரு முறையும் ஃபைன் ட்யூன் பண்ணி ‘விழி மூடி யோசித்தால்’ என்று ஒரு படத்தை உருவாக்கியிருக்கேன். தைரியமா சொல்றேன். நீங்க இதுவரை பார்த்த படங்களில் இது வேற மாதிரி இருக்கும்’. ‘கத்துகிட்ட மொத்த வித்தையும் இதுல இறக்குறேன்’னு அவர் சொல்லியிருந்தால் ஜர்க் அடித்திருக்கலாம். ஐயோ பாவம்… செந்தில் ரொம்பவே அடக்கம். ‘நிச்சயமா என்னையும் என் இயக்கத்தையும் இந்த தமிழ் மக்கள் ஏத்துப்பாங்கன்னு நம்புறேன்’ என்றார்.

‘இன்னும் பல கதைகளை நாளைக்கே ஷுட்டிங் போற அளவுக்கு முழுசா முடிச்சு வச்சுருக்கேன். விழி மூடி யோசித்தால் தரப்போற வரவேற்புதான் என் எதிர்கால சினிமாவை முடிவு பண்ணணும்’ என்றார் நம்பிக்கையோடு.

இந்த படம் ரொமான்ட்டிக் த்ரில்லராம். காமெடி கேரக்டரில் ஊர்வசியும் பவர்ஸ்டாரும் நடிச்சிருக்காங்க. ‘நிச்சயமா ரசிப்பீங்க’ என்றவர், ‘சார்… அப்படியே இன்னொன்னு. நான் ஈகோ பார்க்கிறவன் இல்ல. இந்த ஷுட்டிங் சமயத்தில் எல்லாருக்கும் நானே என் கையால் டீ வச்சு கொடுத்திருக்கேன். இன்னும் டவுன் டூ எர்த்தா இறங்கி பணிவிடை செஞ்சுருக்கேன்’ என்றார்.

அட… இது வேறயா? (ஆமாம்… படம் ஹிட்டாயிருச்சுன்னா அப்பவும் இந்த ‘டவுன் டூ எர்த்’ வருமாண்ணே? )

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்தி- முருகதாஸ்- கோபி- நடுவுல யார் இந்த ஜெகன்? அவர் சொல்லும் பதில் என்ன?

‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம்...

Close