‘HOT HOT’ சூர்யா- ‘COOL COOL’ கவுதம் மேனன்!

நேற்று மாலை சூர்யா அனுப்பிய அறிக்கை இன்டஸ்ரியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ‘துருவ நட்சத்திரம்’ இப்படி துரு பிடித்த நட்சத்திரமாகி எங்கோ கண்காணாத இடத்தில் விழுந்துவிட்டதே… என்று கவலைப்பட்டார்கள் சூர்யா-கவுதமுக்கு இடையேயிருக்கும் பொதுவான ரசிகர்கள். இதற்கு கவுதமின் ரீயாக்ஷன் என்னவாக இருக்கும்? கண்ணில் சோடாபுட்டியை மாட்டிக் கொண்டு ட்விட்டர், பேஸ்புக் என்று சல்லடை போட்டு சலித்தவர்கள் அத்தனை பேரும் ‘ஞே’ என்று விழித்ததுதான் மிச்சம்.

இது குறித்து கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை கவுதம் மேனன். அதற்கு பதிலாக அவர் செய்த வேலை இருக்கிறதே… அதுதான் படுபயங்கரமான ரீயாக்ஷன். யார் யாரோ எழுதிய உப்பு பெறாத விஷயங்களுக்கெல்லாம் ‘லைக்’ போட்டுக் கொண்டிருந்தார். அதில் பாதி குழந்தைகளுக்கான காமிக்ஸ் ஏரியாவை விட தமாஷானது.

இதுக்கெல்லாம் பதறுகிற ஆள் நான் இல்லை டைப்பிலேயே இருந்தது அவரது செய்கைகள். ‘காக்க காக்க’ ஒரே ஒரு படத்தின் மூலம்தான் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் ஸ்டார் ஆனார். ஒரு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு ஸ்டார் ஆனார், ஓரு ஆன்ட்டனி எடிட்டிங் ஸ்டார் ஆனார். அதற்கப்புறம்தான் சூர்யா கூட சில கோடிகளை தன் சம்பளத்தில் கூட்டினார்.

எரிமலை குழம்பை கூட, ஒரு கோப்பை டீயாக்கி உறிஞ்சிவிடும் சக்தி ‘தில்லான’படைப்பாளிகளுக்கு மட்டுமே உண்டு.

கவுதம் ஒரு படைப்பாளி….

Gautham is silent but has lot of meanings!

The entire Kollywood was shaken and surprised at the turn of events between Gautham Menon and Suriya. While Suriya’s fans were understandably subdued, Gautham’s reaction was not to be seen at all, either at Face Book, or at Twitter, even after 24 hours after Suriya’s press release. He was marking ‘likes’ to all those sundry, but never posted his comments on Suriya’s letter. Gautham brought Harris Jayaraj to the world. Gautham showed what RD Rajasekar’s talents are in Photography. Gautham was instrumental in getting a salary hike for Suriya after Kakka Kakka. Gautham is silent on Suriya now. Does it convey any meaning? Yes, it does. But only few can understand the language of silence.

2 Comments
  1. suprajaa says

    Do you know who is the next hero in Goutham Vasudev Menon film.

    watch this video.

    https://www.facebook.com/suprajaa.sridaran/posts/563463977042594

  2. vignesraj says

    நீங்கள் சொல்கிற ஆசாமி தன் பெயருடன் சேர்த்துக்கொண்டிருக்கும் ஜாதிப்பெயரை நீக்கிவிட்டால் அவ்ர் ஒரு படைப்பாளி என ஒத்துக் கொள்ளலாம்! ஆனால் அவர் ஒரு பிழைப்பாளி மட்டுமே! இந்த பிழைப்பாளியின் திரையுலக வெற்றிக்குப் பிறகு இளைய தலைமுறையில் பலர் பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் தத்தம் பெயருக்குப்பின்னால் ஜாதியை இணைத்துக் கொள்வது சாதாரணமாகப்போனது! சினிமாக்காரனை முன்னுதாரணமாகக் கொள்ளும் தமிழகத்தில் நீங்கள் நிஜமாகவே மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் இந்த மாதிரி அயோக்கிய சிகாமணிகளை படைப்பாளி-துடைப்பாளி என ஆராதிக்காதீர்கள்! மலையாளிகள் தம் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பெயரை போட்டுக் கொள்வது சாதரணம் என்று ஜால்ஜாப்பு சொல்ல வேண்டாம்! தமிழ்நாட்டில் அந்த புண்ணாக்கு எல்லாம் வேண்டாம்!! Be a Roman in Rome….இதை அந்தப் பிழைப்பாளியிடம் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்! அதுவரை பிழைப்பாளிகளை எல்லாம் படைப்பாளி என ஆராதிக்காதீர்கள்!….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கவுதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்… -நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை

      Suriya withdraws from Gautham Menon's Dhuruva Natchathiram Suriya has issued a press release late in the evening...

Close