எறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்?
இந்த மாசம் முழுக்க மஞ்சக் குளிச்சுட வேண்டியதுதான் என்று செய்தி சேனல்கள் குவிந்து கிடக்கிற ஒரே இடமாகிவிட்டது நடிகர் சங்கம். ரெண்டு பட்டு கிடக்கிற சங்கத்தில் கண்ட இடத்திலெல்லாம் கதறல்ஸ்.
‘எங்க வயித்துல மண்ணள்ளிப் போட்ட விஷாலை தோற்கடிக்காம விட மாட்டோம்’ என்று நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சுமார் 300 பேர் கூட்டமாக கூடி கொந்தளித்து வருகிறார்கள். போதாத குறைக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலால் பாதிக்கப்பட்ட சிலரும் இங்கு வந்து கூக்குரல் இட்டு வருவதால், வரப்போகிற நடிகர் சங்க எலக்ஷன் சோடா பாட்டில், கல்வீச்சு இல்லாமல் முடிந்தால் ஆச்சர்யம்தான்.
உணர்ச்சியை கிளப்பிவிட்டு குளிர் காய்வதில் தேர்ந்த நடிகர்கள், விதவிதமாக பேசி வாக்காளர்களை மயக்கி வருவதுதான் உச்சக்கட்ட என்ஜாய்மென்ட். அதிலும் சில தினங்களுக்கு முன் விஷால் பேசியது செம காமெடி. “எறும்புங்க எல்லாம் சேர்ந்து ஒரு வீடு கட்டுமாம். அதில் பாம்பு வந்து குடித்தனம் நடத்துமாம்… பாம்பு உள்ள நுழையும் போதே வாலை புடிச்சு வெளியில வீசிடணும்…” என்று கூறி, அவரது எதிரணியான ஐசரி கணேஷ் அணியை வெறுப்பேற்றினார். கஷ்டப்பட்டு நாங்க கட்டிய நடிகர் சங்கத்தில் இன்னொரு அணி பதவியேற்றுக் கொள்வதா என்கிற ஆத்திரம்தான் அதில் வெளிப்பட்டது.
நிஜத்தில் நின்று போன கட்டிடம் எழும்ப ஐசரி கணேஷும் அதிக பணத்தை கொட்டியிருக்கிறார் என்பதுதான் உண்மை. அப்படியிருக்க, இந்த பாம்பு எறும்பு உதாரணத்தில் உண்மை இருக்கிறதா என்று ஆராய ஆரம்பித்திருக்கிறது வாக்காளன் மனசு.
இருந்தாலும், தன்னை தோற்கடிக்க ஆளுங்கட்சி மறைமுக திட்டம் வகுத்திருப்பதாக கூறி வருகிறார் விஷால். இந்த தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன காமெடிகள் காத்திருக்கிறதோ?
Dei vishal hater. Stop sombu thinking to suresh kamatchi only.
How hard vishal fight to get here. All cases and all program.
How much you get pay from that group.
பாக்யராஜ் வந்தேறி தானே ..
தமிழ் குரூப் enge ?
இயக்குநர் பாரதிராஜாவிடம் பாக்யராஜை தொடர்புகொண்டு, விஷால் அணி நடிகர் சங்கத்தையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் ஆக்கிரமித்து திரையுலகையே சீரழித்துவிட்டது. நாம் அதைத் தடுத்தாக வேண்டும் எனவே நடிகர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு நீ போட்டியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். ????
ஐசரி கணேஷ் கிட்ட இருக்குற காசுக்கு குஷால் நெட்டை கருவாயன் ஒரு பிச்சைக்காரன். நம்ம ஆளுங்களும் காசு இருக்கறவன் பின்னாடி தான் போவாங்க. குஷால் நெட்டை கருவாயன் இந்த எலெக்ஷன்ல அசிங்க பட போவது நல்லா தெளிவா தெரியுது. கார்த்திக்கு எதுக்கு இந்த வீண் வேலை?
தன்னை தோற்கடிக்க ஆளுங்கட்சி மறைமுக திட்டம் வகுத்திருப்பதாக கூறி வருகிறார் விஷால். இந்த தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன காமெடிகள் காத்திருக்கிறதோ?
Dei go and read Anantha vikatan and poochimurugan interview.
Your are a journalist ? Just say cheran group. Don’t call you as journalist