ரஜினி விஜய் இனி ஒரே மேடை சாத்தியமா?

அஜீத்தையும் விஜய்யையும் கூட எப்போதாவது ஒரே மேடையில் பார்த்துவிடலாம். ஆனால் ரஜினி விஜய்யை இனி ஒரே மேடையில் பார்க்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டுவதுதான் தாணுவின் திறமை. இந்த முறை அவர் இப்படியொரு திருவிழாவை நடத்தி விடுவது என்ற முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா, இல்லையா? அமையுமா, அமையாதா?

தெறி படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்குள் தாணுவுக்கு லட்டு போல கையில் வந்து விழுந்துவிட்டது கபாலி. லட்டும் லட்டும் மெகா லட்டு என்றாலும், அதை உதிராமல் உடையாமல் பிடித்துவிட வேண்டுமே? அதில்தான் இருந்தது அவரது முழு கவனமும். கபாலி ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அது அப்படி இது இப்படி என்று வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்களில் எலி மேய்ந்தது. எதற்கும் அசரவில்லை கபாலி. விறுவிறுவென வளர்ந்தான். இதில் சுத்தமாக தெறியை மறந்தே போனார் தாணு. கத்தியும் வெற்றி. தெறியும் வெற்றி. இந்த சந்தோஷத்தை மேடை போட்டு கொண்டாட வேண்டிய விஜய், அதற்கான முதல் ஸ்டெப்பை தாணுவே செய்வார் என்று காத்திருக்க, அரசை பகைத்துக் கொண்ட விஜய்க்கு திருவிழா நடத்தினால், கபாலியின் கதி?

பலவாறாக யோசித்த தாணு, அந்த திட்டத்தையே தள்ளிப் போட்டுவிட்டார். இப்போது சகலமும் கைகூடி வந்துவிட்டது. தெறிக்கும் கபாலிக்கும் ஒரே நேரத்தில் விழா எடுத்துவிடலாம்தான். ஆனால் ரஜினி, விஜய்யுடன் அந்த மேடையை பகிர்ந்து கொள்வாரா?

பொதுவாகவே ரஜினிக்கு அஜீத் மீதுதான் அன்பு பாசம் எல்லாமே! அதை நிரூபிப்பது போலவே அசல் பட பூஜைக்கு வந்தார் அவர். அதற்கப்புறம் இவர் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இடையே நடையாய் நடந்த கொரியர் பாய், ஒரே ஆன்மீக புத்தகங்களாக இட மாற்றம் செய்து கொண்டிருந்தான். அந்தளவுக்கு இருவர் கணக்கிலும் புண்ணியமும், புத்துணர்ச்சியும் வரவு வைக்கப்பட்டது. ரஜினியுடன் நெருங்கி பழகுவதற்கு முன் இருந்த அஜீத், இப்போது சுத்தமாக இல்லை. ஆளே மாறிப் போய்விட்டார். எல்லாம் ரஜினி போட்டுக் கொடுத்த ரூட்.

இதே விஜய் படங்கள் சிலவற்றின் பூஜைக்கு ரஜினியை அழைத்தும், மிக நாசுக்காக அதை தவிர்த்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடியவர் ரஜினி என்பது சினிமா இன்டஸ்ட்ரி நன்கறிந்த விஷயம்தான். அது மட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஒரு முன்னணி வார இதழ் வழங்கினாலும், அதை பணிவன்போடு மறுத்துவிட்டு, ரஜினி இருக்கும் வரை அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் சொல்லியிருந்தால், ரஜினியின் குட்புக்கில் எல்லா பக்கங்களிலும் விஜய்யே நிறைந்திருப்பார். ஆனால், சம்பந்தப்பட்ட வார இதழுக்கு தன் நன்றி கடித்தத்தை அனுப்பி அந்த சந்தர்ப்பத்தையும் இழந்தார் விஜய்.

இன்னும் வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ விஷயங்கள் இருவரது நட்புக்கு இடையிலும் வந்துவிட்டு போய்விட்டது. அஜீத்திற்காக பள்ளம் பறித்துக் கூட நிற்க தயாராகிவிட்ட ரஜினி, விஜய்க்காக தன் நாற்காலியை ஷேர் பண்ணிக் கொள்ளப்போவது அவ்வளவு சுலபத்தில் நடக்கும் விஷயம் அல்ல.

இப்படி கடந்த கால சம்பவங்களை அலசி ஆராய்ந்து அலசி பிழிந்து காயப் போட்டாலும், ரஜினிக்கும் விஜய்க்குமான நட்பில் துளியளவுக்கு கூட உப்பு சுவையில்லை என்பதே உண்மை. உப்பில்லா பண்டம் எங்கே போகுமோ, அங்கேதான் போகும் போலிருக்கிறது தாணுவின் மனம் கொள்ளாத இந்த முயற்சி.

இருந்தாலும், மலையை இழுப்போம். வந்தால் மலை. போனால் கூழாங்கல்லு என்கிற அவரது தன்னம்பிக்கை கோட்பாடு இவ்விருவர் விஷயத்தில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வந்தாலும் வரும்! அப்போது அந்த கண்கொள்ளாக் காட்சியை விலை கொடுத்து வாங்க எத்தனை சேனல்கள் எத்தனை கோடிகளோடு காத்திருக்கிறதோ? யாருக்குத் தெரியும்!

3 Comments
 1. Vijay says

  dei naye.. Asal padam poojaiku ponathuku reason ajith illada naye.. Annai illam than.. anga pooja nadanthathu prabhu koptaru so poitu vantharu.. Enatha poojaku varatha ajith naye um rajini varanu sonnathum eee nu vanthutan.. Ithellam theriyama ne ethuku jalra adikura..

  2. Vijay super star name vendamnu sonna videos evlo iruku.. Athellam ne pakalyada.. Ajith ku ne jalra adikurathu onum puthusu illa.. Theriyatha visiyatha therinja mathiri yen solra..Vijay thanu kita poit vizha edunga nu sonnara.. athuku proof kattu. Nathari naye

 2. selva says

  Hello mister ananathanan na ketta varthaila thittuve
  Nermaya news podu
  Vijay pidikkalaya avaru news podathanu tha
  solr ippadi kasa vangittu jalra adikura parthasi
  naye Kasukuku nalla eluthurueenga sir
  Thu thu
  Intha managetta polappu polaikurathukku nandukittu thongalam

 3. thuklak says

  1978ல் பைரவியில் ஆரம்பித்த வசூல் ஆட்டத்தை முள்ளும்மலரும்,ப்ரியா,ஆறிலிருந்து அறுபதுவரை,அன்னை ஓர் ஆலயும்,தாய் மீது சத்தியம்,புவனா ஒரு கேள்விகுறி,காயத்ரி,ன்னு தொடர்ந்து முரட்டுக்காளையில் எம் ஜி ஆரை அடிச்சி பரண் மேல ஏற்றின சூப்பர்ஸ்டார் ஏபிசின்னு பில்லா,தீ,காளி,பொல்லாதவன்னு,பட்டையகிளப்பி தில்லுமுல்லு,தம்பிக்கு எந்த ஊரு,மூன்றுமுகம்,தங்கமகன்,ஹிந்தி கங்குவா,கிரப்தார்,சல்பாஸ்,மீண்டும் தமிழில் தாய்வீடு,அன்புக்கு நான் அடிமை,ரங்கா,போக்கிரிராஜா,குப்பத்து ராஜா,அடுத்த வாரிசு,தனிக்காட்டு ராஜா,என்று உலகில் எவனும் இதுபோல் தொடர் வெற்றியை கொடுத்ததில்லை என்னும் அளவிற்கு 1983 லேயே அலறவைத்தவர்,அது மட்டுமல்ல பம்பர்ஹிட்,சூப்பர்ஹிட்,டூப்பர்ஹிட், என்னும் வார்தையே இவரால் தான் உருவானது.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 1000சீட் கெப்பாசிட்டி கொண்ட திரை அரங்குகளில் ரெகுலர் ஷோவில் இவர் கொடுத்த வெற்றியில் எம் ஜி ஆரே 40% தாண்டவில்லை எனில் இன்றுள்ள சில்லைரைகள்(அஜித்,விஜய்) வெப்சைட்டுக்கும்,பத்திரிக்கைகும் பணம் கொடுத்து,கேராளாவில்,கண்டிகையில்,மலேஷியாவில் என்று பொய்யை உண்மையாக்கும் போலி பத்திரிக்கைகளில் உண்மையான வசூல் விவரங்களை அதிகார பூர்வமாக வெளியிட முடியுமா? நடக்குமா?இது இன்று மட்டுமல்ல 1980களிலேயே நல்லவனுக்கு நல்லவன்,மிஸ்டர் பாரத்,வேலைக்காரன்,மனிதன்,ராஜாதிராஜா,1990களில்ல்பணக்காரன்,தர்மதுரை,தளபதி,மன்னன்,அதற்குபிறகு சொல்லவே தேவையில்லை ப்ளாக் பஸ்டர்னா அது ரஜினி தான்னு எல்லோரும் வேரவழியில்லாம ஒத்துக்கொள்ளதான் வேண்டும் என்றாகி விட்டது.இது போல் இன்னும் பல படங்களை சொல்லமுடியுமா எந்த நடிகனாவது,லிட்டில்,மினி,350 சீட் கெப்பாசிட்டி தியேட்டர்களில் தான் எம் ஜி ஆர்,கமல் .மோகன்,ராமராஜன்,விஜயகாந்த்,ராஜ்கிரன்,சரத்குமார்,விஜய்,அஜித் உள்ளிட்ட பத்திரிக்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்டு பிம்பமாக காட்டப்படும் பகல் காட்சி நாயகன்கள் படம்காட்டினார்கள்.இன்னும் சொல்லப்போனால் ரஜினியின் சுமார் ரக சிவா,கொடிபறக்குது,ராஜா சின்ன ரோஜா,கழுகு,ராணுவவீரன் ,அதிசயபிறவி,பாண்டியன்,படங்களை அல்ல தோல்விபடம் என்று படம் காட்டிய லிங்கா டைரக்டர் ரவிக்குமார் அதிகார பூர்வமாக வித்தவுட் ரைட்ஸ் 160 கோடி வசூலித்துள்ளது என்று பேட்டி கொடுக்கின்றார்,100 க்ரோர் கிளப்னு ஹிந்திநடிகன்ல இருந்து,தெலுங்கு நடிகன் வரை 100 கோடி சென்றதையே விழா எடுக்கின்றான் 200கோடிய தொட்ட படம் தோல்வியாடா முட்டாப்பசங்களே,1978 ல இருந்து கமல்,விஜயக்குமார்,மோகன்,பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,விஜயகாந்த்,ராமராஜன்,ராஜ்கிரண்,விக்ரம்,விஜய்,அஜித், இப்ப சிவகார்த்திகேயன் வரைக்கும் ரஜினிய தாண்டிட்டாங்க,தாண்டிட்டாங்க,தோண்டிட்டாங்க,என்னடா கிணத்த தாண்டிட்டாங்களா,தோண்டிட்டாங்களா,இந்தி அளவிலேயே எல்லா லெஜண்ட்ஸ்ம் ரஜினியின் உயரத்த பார்த்து அதிசயப்பிறவின்னு அதிசயிக்கின்றான்.பம்பரம் விடுற பச்சா பசங்களயெல்லாம் கம்பேர்பண்ணிட்டு மேலே குறிப்பிட்ட பழைய நடிகர்கள் மாதிரி இவனுங்கலெல்லாம் பீல்டுல இருந்து

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Egnapuram Movie Stills Gallery

Close