எதுக்கும் அஜீத்தை கேட்டுப் பாருங்க! ரஜினியின் முடிவு சரியாக இருக்குமா?
“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல முடியும். புதுமை பண்றேன்னு அம்மாவை படம் முழுக்க சும்மான்னு சொல்ல முடியாதுல்ல?” பி.வாசுவின் இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது அறிவுஜீவி இயக்குனர்கள்தான். போகட்டும்… விஷயம் அதுவல்ல.
சினிமாதான் தன் மூச்சு என்று வாழும் இயக்குனர்களில் முக்கியமானவரில்லையா பி.வாசு? இப்பவும் கன்னடத்தில் அவர் இயக்கிய சிவலிங்கா என்ற படம் அந்த மாநிலத்தில் தாறுமாறு தக்காளி சோறாகிக் கிடக்கிறது. இவரது ஆப்தமித்ரா படத்தைதான் தமிழில் சந்திரமுகியாக எடுத்து வரலாறு படைத்தார் பி.வாசு. இப்பவும் சிவலிங்காவை வேறு மொழிகளில் ரீமேக் பண்ண பெரும் கூட்டம் காத்துக் கிடக்கிறதாம். இந்த கதை ரஜினி சாருக்கு சூட்டாக இருக்கும் பி.வாசு ஃபீல் பண்ண, அதை நேரடியாகவே ரஜினியின் காதுக்கும் கொண்டு போனாராம்.
அப்போது ரஜினி சொன்ன வார்த்தைகள்தான் இவை. “அந்த கதையில் அஜீத் நடிச்சா நல்லாயிருக்கும்”
ஹாரர்… த்ரில்லர் வகை கதை இது. மகா மகா ஸ்டைலிஷான அஜீத் இதில் நடித்தால் எப்படியிருக்கும்? ரஜினியின் அனுபவத்திற்கே இப்படியொரு விஷயம் பாசிட்டிவ்வாக தெரியும் போது, அதில் மூக்கை நுழைக்கிற உரிமையும் அக்கறையும் அஜீத் ரசிகர்களுக்குதான் உண்டு.
பண்ணலாமா? பண்ணலாமா?