கமலும் சிபிராஜும் ஒண்ணா!? நாட்ல எப்பிடி ராசா மழை பெய்யும்?
“கமல்ஹாசன் அவர்களுக்கு எப்படி சத்யா திருப்புமுனையாக அமைந்ததோ அதே போல் சிபிராஜுக்கும் இந்த சத்யா திருப்பு முனையாக இருக்கும்!!” – இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இப்படியொரு பிரஸ் ரிலீஸ் வந்திருக்கிறது ஒரு இயக்குனரிடமிருந்து. அட சின்ன சாமிகளா…. உங்களுக்கே இது ஓவராயில்ல? கமல்ஹாசனின் ‘சத்யா’ படத் தலைப்பை சிபிராஜ் படத்திற்கு வைத்ததே பெரும் தப்பு. இந்த லட்சணத்தில் கமலுடன் மிஸ்டர் சிபியை ஒப்பிட்டு ஒரு ‘கொட்டேஷன்’ வேறு! (உங்க படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் தமிழ்நாட்ல மழையே வராது ராசாக்களா)
சைத்தான் என்ற படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ண மூர்த்தி என்பவர் இயக்கி வரும் படம்தான் இந்த சத்யா. ரம்யா நம்பீசன், வரலட்சுமியுடன் மேலும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் ஹிட்டடித்த ‘ஷணம்’ என்ற படத்தின் ரீமேக்தான் இது. இந்த கதைக்கு ‘சத்யா’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால், கமல்ஹாசனை சந்தித்து தலைப்பை எழுதிக் கேட்டார்களாம். அவரும் பெரிய மனசுடன் கொடுத்துவிட்டார். பெரும்பாலும் தலைப்பு வைக்க தடுமாறுகிற இயக்குனர்கள்தான் படத்தின் ஹீரோ பெயரையே அப்படத்திற்கு தலைப்பாக வைக்கிறார்கள். இந்த கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என்று அடிஷனல் பில்டப் வேறு கொடுப்பார்கள். படத்தை பார்த்தால், நமக்கு நூறு தலைப்புகள் தோன்றும். அது வேறு விஷயம். இந்தப்படத்தை பார்க்கும்போதும் நமக்கு வேறு வேறு தலைப்புகள் தோன்றினால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த கமல் மீது கோபப்படுவதை தவிர வேறுவழியில்லை.
படத்தில் ஒரு முத்தக் காட்சி. ரம்யா நம்பீசனும் சிபிராஜும் லிப் கிஸ் அடித்துக் கொள்ள வேண்டுமாம். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம் சிபி. இயக்குனருக்கு வருத்தம். ஆனால் ரம்யாவின் சந்தோஷத்தை அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதாக தெரியவில்லை.
இந்தப்படத்தை சிபிராஜே தயாரித்திருக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ ‘போக்கிரி ராஜா’ போன்ற அதி சிறப்பான படங்களில் நடித்த சிபிராஜின் கதையறிவை படம் வந்த பின்பு பார்த்து புல்லரிக்க தயாராகுங்க பீப்பிள்ஸ்!
https://youtu.be/twhtUwDaFfQ