பக்திப்படத்தில் ஒரு முக்கோணக் காதல்! சித்தப்பு சரவணனுக்கு ஐயப்பன் ஆதரவு!
‘சாமி படம்’ என்ற சொல்லையே, சதிகாரத் தமிழன் வேறொரு அர்த்தம் வருவது போல ‘கோட் வேர்டு’ ஆக்கிவிட்டான். இந்த நேரத்தில் நிஜமாகவே ஒரு சாமிப்படம் வருவது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி! அதுவும் சீசன் டயத்தில் மட்டுமே வரும் ஐயப்பன் படத்தை இப்போது பரபரவென எடுத்து வருகிறார்கள். படத்தின் ஹீரோ நம்ம சித்தப்பு சரவணன்!
படம்தான் பக்திப் படமே தவிர, பரபரவென்ற திரைக்கதைக்கு பஞ்சமில்லாதபடி ஒரு முக்கோணக் காதல் கதையை உள்ளே வைத்திருக்கிறார் டைரக்டர் கே.ஆர்.மணிமுத்து. ‘குருசாமி’, ‘அபூர்வமகான்’ போன்ற படங்களை இதற்கு முன் இயக்கியிருக்கிறார் இவர். ஒளிப்பதிவு & நவ்ஷத், கதை, வசனம் & கே.ஆர். வேலாயுதம், இசை & கண்மணிராஜா, பாடல்கள் & அண்ணாமலை, தமிழ்அமுதன், ஏம்பல்ராஜா, வைரமூர்த்தி, நடனம் & பவர் சிவா, மக்கள் தொடர்பு & பெருதுளசி பழனிவேல்,
சரவணன் ஒருமேடைப்பாடகர் இவரது குரலுக்கு மயங்கி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் அர்ச்சனாசிங். இவர்மீது ஒருதலைக் காதல் கொண்டவர் சத்யாபிரகாஷ். இவர் காதலித்துக் கொண்டிருக்கும்போதே அர்ச்சனாசிங் இவரது காதலை ஏற்றுக் கொள்ளாமல் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியபிரகாஷ் ஏதேதோ சதி வேலைகள் செய்து அவர்களை பிரிக்க முயற்சிக்கிறார். மேடையில் பாடும் சரவணனுக்கு பலபெண்களுடன் தொடர்பு இருக்கிறது இவரது குரலுக்கு மயங்கி பலபெண்கள் மேடையிலேயே அவருக்கு முத்தமிடுகிறார்கள் அதை அவர் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடன் ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டிருக்கிறார். உங்களுக்கு துரோகம் செய்கிறார். அவரைவிட்டு வெளியே வந்து விடுங்கள் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி இருவரையும் பிரித்து விடுகிறார்.
பிரித்தது மட்டுமில்லாமல் வீட்டில் தனியாக இருக்கும் அர்ச்சனாசிங்கை பலாத்காரமாக அடைவதற்கு வீட்டிற்கே சென்று முயற்சி செய்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் சரவணனின் நண்பர்கள் அவருக்கு விபரமாக எடுத்துச் சொல்கிறார்கள். சரவணனும் தனது மனைவியை எப்படியாவது அந்த மூர்க்கனிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று துடிக்கிறார். வீட்டைநோக்கி ஓடுகிறார்.
அந்த நேரத்தில் ஐயப்பனே வந்து காப்பாற்றியிருப்பாரே… என்றெல்லாம் நீங்கள் யூகித்தால், சபரி மலைக்கு வருஷம் தோறும் செல்பவர் என்று அர்த்தம். எப்படியோ… பல வருஷங்களுக்கு பிறகு ஒரு சாமிப்படம் வருவதும், அதற்காக பக்தர்கள் எதிர்நோக்கி காத்திருப்பதும் நல்ல விஷயம்தானே?