ஜெயலலிதா மரணம் மர்மமானதா? சாவின்போது அருகிலிருந்த சரவணன் உடைக்கும் உண்மை!
வர்தா புயலையே வாய்க்குள் வைத்து அடைத்த மாதிரியிருக்கிறது பத்திரிகையாளரும், ‘கத்துக்குட்டி’ பட இயக்குனருமான இரா.சரவணன் சொல்லும் உண்மைகள். ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒட்டுமொத்த தமிழகமும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து வரும் நிலையில், 75 நாட்கள் அப்போலோவின் நிலைமையை அறிந்தவரும், முதல்வர் இறந்த அந்த அந்த நிமிஷங்களில் அருகில் இருந்தவருமான இரா.சரவணன் சொல்லும் உண்மைகள், மிக மிக முக்கியமானவை. என்ன சொல்கிறார் சரவணன்?
இன்று பலரும் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு மர்மமும் இல்லை. அவர் இறந்ததாக அறிவிக்கப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் கூட, மருத்துவர்கள்தான் அதை உறுதி செய்ய நேரம் எடுத்துக் கொண்டார்கள். இரத்தத்தில் இன்னும் குறிப்பிட்ட சதவீதம் வெப்பம் இருக்கிறது. அது குறிப்பிட்ட அளவு குறைந்த பின்புதான் மரணத்தை அறிவிக்க முடியும் என்றார்கள்.
இரண்டாவது தளத்தில் முதல்வர் சிகிச்சை பெற்றுவந்த அறைக்கு எதிரில் இன்னொரு அறையில் தங்கியிருந்த சசிகலாவுக்குதான் முதலில் தகவல் சொல்லப்பட்டது. வழக்கமாக கிராமத்து பெண்மணிகள் எப்படி கதறி அழுவார்களோ… அப்படி அழுதார் அவர். அவரை கைதாங்கலாகதான் முதல்வர் அறைக்கே அழைத்துச் செல்ல முடிந்தது. அவரும் இளவரசியும் சுமார் 15 நிமிடங்கள் அந்த அறையில் இருந்தார்கள். அதற்கப்புறம் முதல்வரின் உயிரற்ற உடலை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வந்தார்கள். அப்போது அவர் உறங்குவது போலவே இருந்தார். அவ்வளவு அழகாக இருந்தார். அந்த புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு வழங்கியிருந்தால், இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் மறுநாள் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது முகம் வேறு மாதிரிதான் இருந்தது.
சசிகலாதான் மத்திய அமைச்சர்களையும் வேறு பலரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். நிஜத்தில் சசிகலாவையே சில நாட்கள் சிகிச்சை பெறும் அறைக்குள் அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை. கடைசி காலங்களில் அவர் எழுந்து நிற்கிற அளவுக்கு உடல் நலம் தேறியிருந்தார். நர்ஸ் மற்றும் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்றால், சிலேட்டில் எழுதி காண்பிப்பார். அந்தளவுக்கு அவர் முழு நலத்துடன் இருந்தார். சிகிச்சையின் போது ஜெயலலிதாவை சந்தித்த வெளி நபர் சசிசகலா மட்டும்தான்.
ஜெயலலிதா முகத்தில் போடப்பட்டிருந்த துளை, அவர் பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்றும், என்பார்மிங் செய்யப்பட்டபோது ஏற்பட்ட ஓட்டைகள்தான் அவை என்றும் பேசப்பட்டு வரும் தகவல்களுக்கும் சரவணன் விளக்கம் அளித்தார்.
அப்படியொரு விஷயம் நடந்திருந்தால், அந்த ஓட்டையை முகத்தில் பூசப்பட்டிருந்த மஞ்சள் கொண்டே மறைத்திருக்கலாமே? ஏன் அதை அவர்கள் செய்யவில்லை? கன்னப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வெள்ளை துணியின் மூலம் கூட அந்த புள்ளிகளை மறைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லையே? அப்படியிருக்கும் போது இதில் எந்த புதிரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்கிறார் இரா.சரவணன்.
அவ்வளவு தூரம் மருத்துவமனையில் கதறி அழுத சசிகலா, அதற்கப்புறம் ராஜாஜி ஹாலில் அவ்வளவு உறுதியாக நின்றது எனக்கே வியப்பாகதான் இருந்தது என்கிறார் அவர்.
இது மட்டுமா வியப்பு? சரவணன் சொல்வது அவ்வளவுமே வியப்புதான். எது எப்படியோ? ஒரு மாபெரும் தலைவியின் மரண மர்மத்தை அவிழ்த்த வகையில், ஒரு பத்திரிகையாளரின் கடமையை மிக மிக சரியாக செய்திருக்கிறார் இரா.சரவணன்.
https://youtu.be/P9ny4ZxcfG0
நீங்களும் விலை போய் விட்டீர்களா?
ivaru anga vilakku puducchu paarthaara