வெங்காயத்துக்கு ஒரு நீதி, வெள்ளரிக் காய்க்கு ஒரு நீதியா? விஜய் படம்னா தனியா பர்மிஷன் கொடுப்பீங்களா? என்று ஆளாளுக்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தடையை மீறி, விஜய் பட ஷுட்டிங்குக்காக இரண்டு நாள் ஷுட்டிங் பர்மிஷன் கொடுத்ததன் விளைவு இது. இதற்கு முறையாக சங்கம் பதில் சொல்லியிருந்தாலும், இந்த பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் போலிருக்கிறது இன்னொரு சம்பவம்.
ஜுங்கா பட ஷுட்டிங்குக்காக போர்ச்சுக்கல் சென்றிருக்கிறார்கள் அப்படக்குழுவினர். ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் சாயிஷாவுடன் சுமார் முப்பது பேருக்கும் மேல் பயணம் போயிருக்கிறார்கள். அங்கு பத்து நாட்கள் ஷுட்டிங் நடைபெறுமாம்.
இது குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் சிலர் கேள்வி எழுப்பியதாகவும், அதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதாகவும் கூறப்படுகிறது.
வம்பு தும்புக்கு போகாத விஜய் சேதுபதியை, கொம்பு சீவி கூட்டிட்டு போனது யாருங்க?