விஜய் சேதுபதியுடன் நாலு நாள்! சிம்பு வெயிட்டிங்!

ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்லையோ? சிம்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

மணிரத்னம் படத்தை பொருத்தவரை நான்கு நாட்கள் விஜய் சேதுபதியும் சிம்புவும் சேர்ந்து வருகிற காட்சிகள் மட்டும் மிச்சமிருக்கிறது. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்களாம் இருவரும். இதற்கு முன் சில முறை சந்தித்திருந்தாலும் திக் பிரண்ட்ஸ் இல்லை. இந்த காம்பினேஷன் டைம், அதற்கான வழியை ஏற்படுத்தித் தருமல்லவா? அதனால்தான்..

ஒரு சில காட்சிகளுக்காக வெளிநாடு சென்றுவிட்டு திரும்பினால் படம் ஓவர். அதற்கப்புறம் சிம்புவின் திட்டம் என்ன?

ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப் போகிறார் சிம்பு. இசை யுவன்சங்கர்ராஜா. மொத்தம் முப்பதே நாட்களில் படத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதாக ஷெட்யூல் வகுத்திருக்கிறார். தன்னை பற்றிய இமேஜை அடித்து நொறுக்குவதுதான் அவரது பெரும் லட்சியமாக இருக்கிறதாம்.

எல்லாம் ‘வல்லவன்’ இறைவன் ஆச்சே? மனசுல புகுந்து மாற்றத்தை கொடுத்துட்டானோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காலாவுக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்குவதில் சிக்கல்!

ஏப்ரல் 27 ந் தேதி திட்டமிட்டபடி ‘காலா’ படத்தை வெளியிட்டு விட துடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். படத்தை வாங்கிய லைக்கா நிறுவனத்திற்கும் அதே லட்சியம்தான். ஆனால் அதற்கு...

Close