காலாவுக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்குவதில் சிக்கல்!

நடுவில் கேம் ஆடுகிறதா தயாரிப்பாளர் சங்கம்?

ஏப்ரல் 27 ந் தேதி திட்டமிட்டபடி ‘காலா’ படத்தை வெளியிட்டு விட துடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். படத்தை வாங்கிய லைக்கா நிறுவனத்திற்கும் அதே லட்சியம்தான். ஆனால் அதற்கு முன் படத்தை தணிக்கை செய்திருக்க வேண்டுமே? ஆன் லைன் மூலம்தான் அப்ளை செய்ய வேண்டும். வரிசைப்படிதான் படத்தையும் பார்ப்பார்கள். எனவே இப்பவே அதற்கான வேலைகளை முன்னெடுக்கிறாராம் தனுஷ்.

அங்குதான் சிக்கல். தயாரிப்பாளர் சங்கம் ‘பப்ளிசிடி கிளியரன்ஸ் சர்டிபிகேட்’ கொடுத்தால்தான் சென்சாருக்கு அப்ளை செய்ய முடியும். ஆனால் அந்த சர்டிபிகேட்டை வழங்காமல் இழுத்தடிக்கிறதாம் சங்கம். ஏன் இப்படி இழுத்தடிக்க வேண்டும்? இதில் சுயநலன் இருக்கிறதா? பொதுநலன் இருக்கிறதா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்திருக்கிற நிலையில், ரஜினிக்கு ஆதரவான சிலர் பேச ஆரம்பித்திருக்கிற விஷயம்தான் படு பயங்கர ஷாக். தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ், கபாலிக்கு முன் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முற்பட்டார். ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் உரிமையை வாங்கி வைத்திருந்த இயக்குனர் சித்திக்கே இப்படத்தை இயக்குவதாகவும் திட்டம். ஆனால் என்ன காரணத்தாலோ ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய ரஜினி, அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.

அப்போது ஏற்பட்ட ஏமாற்றத்தைதான் இப்போது காலாவுக்கு பப்ளிசிடி கிளியரன்ஸ் கொடுக்கிற விஷயத்தில் காட்டுகிறார் துரைராஜ் என்கிறது ரஜினிக்கு ஆதரவானோர் வட்டாரம்.

ஆனால், ஷுட்டிங்குகளை நிறுத்தி, போஸ்ட் புரடக்ஷன் பணிகளையும் நிறுத்தியதே ஸ்ரைக் முடிந்த பின் எல்லா படங்களும் ஒரே நேரத்தில் வந்து ரிலீஸ் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்குதான். இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசுகிறவர்கள்.

தன் மீது விழுந்த பழிச்சொல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் எஸ்.எஸ். துரைராஜ்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிக் பாஸ் சீசன் 2 மீண்டும் கமல்!

https://www.youtube.com/watch?v=1cwKDe0Z8bs

Close