துப்பாக்கி சூடு! கலவரம்! ஜுலைக்கு தள்ளிப் போனது காலா ரிலீஸ்? ரஜினி பரபரப்பு முடிவு!

சேட்டிலைட், எப்.எம்.எஸ் மூலமாக ரிலீசுக்கு முன்பே 100 கோடி வசூலை பார்த்துவிட்ட காலா, ஏப்ரலில் ரிலீஸ் ஆகாமல் ஜுன் 7 ந் தேதிக்கு தள்ளிப் போனது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று? ரஜினி. இன்னொன்று இப்படத்தில் ரஜினி பேசப்போகும் அரசியல்.

ஆனால் அவர்களின் ஆவலில் அவலை திணித்துவிட்டார் ரஜினி. யெஸ்…. படத்தை ஜுன் 7 ந் தேதி வெளியிட வேண்டாம். ஜுலை மாதம் தள்ளிப் போடுங்கள் என்று கூறிவிட்டாராம். ஏன்?

தூத்துக்குடி கலவரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ரஜினி படம் வெளியீடு என்பது கொண்டாட்டமாக இருக்கும். அது தேவையில்லாத ஒன்று. மக்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என்று நினைத்தாராம். வெளிநாட்டில் இருக்கும் தனுஷுக்கு ரஜினியின் விருப்பம் சொல்லப்பட்டுவிட்டது.

அவர் சென்னை திரும்பியதும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரக்கூடும்.

ரஜினியின் முடிவை பாராட்டதான் வேண்டும்!

Read previous post:
ஓபிஎஸ் ஈபிஎஸ்! நேரடி எதிர்ப்பில் இறங்கிய விஜய்!

Close