கடைசி விவசாயி! கவுத்துட்டீங்களே காக்கா முட்டை மணிகண்டன்?
தமிழ்சினிமாவில் மகேந்திரன் காலம் முடிந்துவிடவில்லை. அவரது படங்களின் உயிர்ப்பு இன்னும் இருக்கிறது என்பதை நிரூபிக்க தகுதியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் காக்கா முட்டை மணிகண்டன். ஆர்ட் பிலிம் டைப் படங்கள் என்றாலே அலறிக் கொண்டு ஓடும் தமிழினத்தை, ‘தம்பி வா. நல்லதை சொல்றேன். ரசிக்க ரசிக்க பாரு…” என்று தியேட்டருக்குள் அழைக்கும் வித்தை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. காக்கா முட்டையும் சரி. ஆண்டவன் கட்டளையும் சரி. மணிகண்டனின் புகழுக்கு ஆயிரம் வாட்ஸ் பேட்டரிக்கான அடையாளம்.
விரைவில் அவர் துவங்கவிருக்கிற புதிய படம் ‘கடைசி விவசாயி’. தலைப்பே சொல்லிவிடும் இது ஒரு விவசாயியின் கதை என்பதை. யதார்த்தத்திற்கு அருகில் நின்று படம் எடுக்கும் மணிகண்டன், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதைதான் காட்டப் போகிறார் என்று நினைத்தால்? அதுதான் இல்லையாம். அரசல் புரசலாக அவர் எடுக்கப் போவது என்ன என்பது பற்றிய தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது. அதன்படி இது விவசாயியின் தண்ணீர் பிரச்சனை பற்றிய படமாக இருக்காது.
அப்படின்னா?
விதை விதைக்கும் விவசாயி, தன் விளைச்சலை பறவையினமான மயில் மற்றும் மான்களிடமிருந்து எப்படி காப்பாற்றப் போராடுகிறான் என்பதுதான் மையப்புள்ளியாம். பறவைகளை வாழ விடுங்கள். மரங்களை வெட்டி பறவைகளின் வாழ்விடத்தை சேதப்படுத்தினால், அது பயிர்களை சேதப்படுத்தும் என்பதாக முடியுமாம் கதை.
நல்ல விஷயம்தான். ஆனால் கர்நாடகாவின் பிடிவாதத்தால் நம்ம ஊர்ல விவசாயி செத்துப் போறானே… அதை பற்றி முதல்ல சொல்லுங்க மணிகண்டன்.
To listen Audio Click below:-
https://youtu.be/BM2nz6I61nY