டென்ஷனிலிருந்து விடுபட்டார் ஜி.வி.பிரகாஷ்! கூலான குமாரு 10 ந் தேதி வர்றாரு…
இனி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்தாலும், அதை கிழியாமல் சிதையாமல் வாங்க வேண்டும் என்றால் கோர்ட் தடை, குழாயடி சண்டை, குண்டாந்தடி பஞ்சாயத்து என்று எல்லாவற்றையும் மீட் பண்ணினால்தான் முடியும் போலிருக்கிறது. அப்படியொரு அபாயம் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கும் வந்தது. கடைசியில் யார் வென்றது?
இந்தப்படத்தை வெளியிடக் கூடாது என்று விநியோகஸ்தர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘10 ந் தேதி படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை’ என்று கூறிவிட்டது.
கடந்த சில தினங்களாக நம்ம படம் என்னாகுமோ என்கிற கவலையில் இருந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹன்ரட் பர்சென்ட் ஆனந்தம்! அவருக்கு மட்டுமா ஆனந்தம்? படத்தை எம்.ஜி.முறையில் வாங்கி, குமாருக்காக ஆவலோடு காத்திருந்த விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கூடதான் ஆனந்தம்.
பின் குறிப்பு – கடவுள் இருக்கான் குமாரு படத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது என்று நினைத்திருக்கலாம். நேற்றே இப்படம் குறித்த பிரமோஷனில் இறங்கிவிட்டார் நிக்கி கல்ராணி. பேஸ்புக்கில் லைவ்வாக வந்தவர், இப்படத்தை பற்றி கொத்து கொத்தாக விஷயங்களை கொட்டியிருந்தார். அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த உரையாடலில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் நிக்கி.
கடவுள் இருக்கான் ஜி.வி.பிரகாஷ் குமாரு – Chennai HC Banned the movie.