கமல்ஹாசனுக்கு இன்னும் ஒரு ஆபரேஷன்? நடுவில் சில திட்டங்கள்! அதென்ன?

கமல்ஹாசனுக்கு பஞ்சாங்கம் ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லை. ஆனால் மிஸ்டர் கஷ்டம் அவரை துரத்திக் கொண்டேயிருப்பதற்கு காரணம், அவரல்ல. கிரகங்கள் என்கிறார்கள் சோதிட சிகாமணிகள். அதை நிரூபிப்பது போல, இன்று அதிகாலை கமல் வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் மின்சாரம் லீக் ஆகி, தீ பிடித்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கஷ்டப்பட்டு தீ பரவாமல் தடுத்திருக்கிறார்கள்.

இந்த பிரச்சனை இன்று. ஆனால் சில வாரங்களுக்கு முன் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கீழே விழுந்து அவர் காலில் ஆபரேஷன் செய்யப்பட்டதல்லவா? அதே காலில் மீண்டும் இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்களாம். இந்த அறுவை சிகிச்சையை தவிர்க்கவே முடியாது என்று அவர்கள் கூறியிருப்பதுதான் பகீர். அந்த ஆபரேஷனையும் அவர் செய்து கொண்டால், அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு நடமாட சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஸ்வரூபம் பார்ட் 2 பஞ்சாயத்தை பேசித் தீர்த்து அப்படத்தை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்தாராம். இவர் கேட்ட பத்து கோடியை ஆஸ்கர் ரவிச்சந்திரன் கொடுக்க மறுப்பதால், இழுபறியில் இருந்தது நிலைமை. தற்போது கமலும் இறங்கி வர… அதே வேகத்தில் ஆஸ்கர் பிலிம்சும் இறங்கி வந்திருக்கிறதாம்.

அநேகமாக கமல் அறுவை சிகிச்சைக்கு போகிற நேரம் பார்த்து விஸ்வரூபம் பார்ட் 2 திரைக்கு வரக்கூடும்! நடுவுல வேறெந்த கிரகமும் புகுந்து இம்சிக்காமலிருக்கணும். அது ரொம்ப முக்கியோம்…

https://www.youtube.com/watch?v=vQBQZx6L6Ok&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டைரக்டர் ஷங்கரின் எரிச்சலுக்கு பா.ரஞ்சித் காரணமா?

Close