கமல் விஷால்! கெமிஸ்ட்ரிக்கு காரணம் இதுதான்!
அஜீத், ரஜினி போல ஆகாயத்தில் உட்கார்ந்து கொள்ளாமல் இன்டஸ்ட்ரிக்கு நல்லது கெட்டது என்றால், இறங்கி வேலை பார்க்கிற விஷயத்தில் கமல் ஒரு சமானியன்! முன்னணி நடிகர்களே அணுக முடியாத ஆண்டவனாக தன்னை நினைத்துக் கொண்டு அலட்டிக் கொள்வதுமில்லை. அப்படிப்பட்ட கமல்ஹாசனை தனது வழிகாட்டியாக கருதும் விஷால், அவ்வப்போது அவரது ஆலோசனைக்காக ஆழ்வார்பேட்டையின் கதவை தட்டுவதும் உண்டு.
இது ஒருபுறமிருக்க…. கமலுக்காக தானே முன் வந்து விஷால் செய்த ஒரு காரியம் ஆழ்வார்பேட்டை அண்ணாச்சியை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்திருக்கிறது. (வெகு விரைவில் அரசியல் இயக்கம் காணப்போகும் கமலின் வலது மற்றும் இடது கரமாக விஷாலும் செயல்படுவார் என்கிறது இன்னொரு அதிகாரபூர்வமற்ற தகவல்)
அது கிடக்கட்டும்… அதைவிட முக்கியமான விஷயம் இது.
விஸ்வரூம் 2 பிரச்சனையில் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கமலுக்கும் நடுவே வாய்க்கால் வரப்பு தகராறு இருந்து வருகிறதல்லவா? அதை தீர்த்து வைக்க ஒருவரும் முன்வராத நிலையில், விஷாலே முன் வந்து அந்த சிரமத்தை தன் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டாராம். தன்னந்தனி மனுஷனாக இருவரது ஆபிசுக்கும் வீல் தேய கால் தேய சுற்றியவர், கடைசியில் அந்த இடியாப்ப சிக்கலை தீர்த்தே வைத்துவிட்டாராம்.
இனி ஆஸ்கர் பிலிம்ஸ் பக்கம் கமலும், கமல் பக்கம் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் தலைவைத்து படுக்க மாட்டார்கள் என்றாலும், விஸ்வரூபம்2 சேதாரமில்லாமல் திரைக்கு வரக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லா புகழும் விஷாலுக்கே!
பின்குறிப்பு- அதற்காக பெப்ஸி விஷயத்தில் நீங்கள் அடித்த பல்டியை அந்த கமலே ஒப்புக் கொள்ளப் போவதில்லை!
பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களுடன் வேலை செய்வோம் என்கிற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை Vishal dinakaran