ஆபாச கோஷ்டியை அலற விட்ட கார்த்திக் சுப்புராஜ்!
‘கள்ளச்சிரிப்பழகி’ என்றொரு ஆபாசப்படத்தை தயாரித்திருக்கிறார் ஒருவர். ‘ஏ ட்ரிபியூனல்’ என்றொரு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டார். (அப்படியென்றால் ஏ யை விட அதிகமா விஷயம் இருக்குமாம்) இவர் ரிலீசுக்கு தயாராகிற நேரத்தில்தான் திடீர் அதிர்ச்சி. ‘கள்ளச்சிரிப்பு’ என்றொரு ஷார்ட் பிலிம் தயாரித்து அதை செல்போன் ஆப் மூலம் வெளியிட்டிருக்கிறார் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் வருகிறது. அவ்வளவுதான்… பதறியடித்துக்கொண்டு கார்த்திக் சுப்புராஜிடம் பேசியவருக்கு நல்ல டோஸ் விழுந்ததாம். “யோவ்… உன் படமும் என் படமும் ஒண்ணா. அசிங்கப்படுத்தாத. போனை வை” என்றாராம் கா.சு.
கையை பிசைந்து கொண்டு நிற்கிறது ஆபாச கோஷ்டி!