எவ்ளோ கோவம்? வடிவேலுவை கோர்த்துவிட்ட குஷ்பு!

‘நானே சிவனேன்னு கிடக்கேன். என்னை ஏன் தாயீ கோர்த்து விடுறே…?’ என்று வடிவேலு குஷ்புவுக்கு போன் அடித்தால் கூட ஆச்சர்யமில்லை. ஏனென்றால் திரையில்தான் சிரிப்பு. நிஜ வாழ்வில் நெருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் வடிவேலு. நாலாபுறமும் பிரச்சனை. நடு நடுவே கோர்ட் கேஸ் என்று அவரது லைஃபில் அநியாய குடுமிப்பிடி.

சமீபத்தில் வந்த மெர்சல் படத்தில் வடிவேலுவின் போர்ஷனை கண்டபடி நறுக்கி எறிந்துவிட்டதாக அட்லீ மீதும் கடுப்பிலிருக்கிறார் மனுஷன். இந்த நேரத்தில், குஷ்பு ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். என்னவென்று?

“ஜி.எஸ்.டி பற்றி விஜய் டயலாக் பேசுன விஷயத்தை வச்சு இவ்ளோ பொங்குறீங்களே? அதே படத்தில் வடிவேலு உங்க டிஜிட்டல் இந்தியா பற்றியும் கிண்டல் பண்ணியிருக்கார். அவரை கேட்க மாட்டீங்களா?” என்று.

தெருவோட போற தேவாங்கை எதுக்கு நம்ம மேல ஏவி விடுறாராரு என்று அதிர்ச்சியாகிவிட்டாராம் வடிவேலு. இருந்தாலும் சுந்தர்சியே வடிவேலு வீடு தேடி வந்து கால்ஷீட் கேட்டபோதும், ‘உங்க கம்பெனியில் நடிக்கறதா இல்ல’ என்று ஒரு காலத்தில் முறுக்கிக் கொண்டு பதில் சொன்னது அவருக்கு ஞாபகம் வராமலா இருக்கும்?

பிடிக்காதவங்களை கோர்த்துவிடுவதுதான் சிறந்த அரசியல். குஷ்புதான் இப்போ ஹன்ட்ரட் பர்சென்ட் அரசியல்வாதியாச்சே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்த கடைசி நேரம்…! விஜய் தந்த கோடிகள்!

Close