கொடியில் சிக்கிய தனுஷ்! எப்படி?
விதையை பார்த்தே, ‘அது விளையுமா… அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா?’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி! அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில் வெற்றிமாறனெல்லாம் முக்கியமான நபர் என்பது ஒரு புறம் இருக்கட்டும். துரை.செந்தில்குமாரும் அதில் முக்கியமானவர்தான்.
கொடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த தனுஷ் பேசும்போது, தான் எப்படி கொடியில் சிக்கினேன் என்பதை விளக்கமாக கூறினார். வெற்றிமாறனோட பொல்லாதவன், ஆடுகளம் பண்ணும்போதெல்லாம் துரை.செந்தில்குமாரும் எங்க டீம்ல கிரிக்கெட் விளையாடுவார். உதவி இயக்குனர்களை அவ்வப்போது கவனிச்சு பார்க்கும் போது, சிலர் மீது ஒரு நம்பிக்கை வரும். இவங்ககிட்ட விஷயம் இருக்குன்னு புரியும். அப்படி நான் கவனிச்சு வச்சிருந்தவர்தான் துரை.செந்தில்குமார்.
சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணுறதுக்கு நல்ல இயக்குனர்கள் தேடிக் கொண்டு இருந்தப்பதான், செந்திலை அனுப்புறேன். கதை கேளுங்கன்னு வெற்றி மாறன் அனுப்பி வைச்சார். அதற்கப்புறம் எதிர்நீச்சல், காக்கி சட்டைன்னு ரெண்டு படங்கள் பண்ணியாச்சு. இந்த கொடி கதையை அவர் சொன்னதும் அக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடிச்சேன். இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா என்பதை நீங்கள் திரையில் வந்து பார்க்கும் போது உங்களுக்கு புரியும் என்றார் தனுஷ்.
கொடியில் ரெண்டு தனுஷ். ஒரு தனுஷுக்கு த்ரிஷாவும், இன்னொரு தனுஷுக்கு அனுபமா என்கிற கேரள ஹீரோயினும் ஜோடி. தீபாவளிக்கு வரப்போகும் கொடி, இப்பவே உயர பறக்க ஆரம்பிச்சாச்சு!
To listen audio click below:-