பாலிவுட்டுக்கு போகவிருக்கும் குறளரசன்! பாண்டிராஜு… எங்கயிருக்கீங்க?

கோலிவுட்டுக்கு அடங்காத ‘கோப’வுட்டு ஹீரோக்களால் அல்லுசில்லாகிவிட்டது தமிழ்சினிமா! ‘யாரு கெட்டா எனக்கென்ன, என் பாக்கெட் நிரம்பணும்’ என்கிற கொள்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தொங்கும் இவர்களால், எடுத்த படமெல்லாம் லாஸ். இனி எடுக்கப்போவதும் லாஸ் என்கிற சிந்தாந்தத்தை நோக்கி டிராவல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்த அரிப்பு போதாதென, நாலு பாட்டுக்கு கூட நாக்கு புரளாம சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் இசையமைப்பாளர்கள். அவர்களும் கோடிக்கு மேல் என்று ஆரம்பித்துவிட்டதால் கோபத்தை இறக்கி வைப்பது எங்கே, எப்படி? என்று தவிக்க ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனங்கள்.

இப்படியொரு பரபரப்பான கால சூழலில் ‘எந்த குட்டையில தூண்டில வீசி கெண்டை மீனுக்கு காத்திருக்கிறாரோ, ஆளையே காணுமேப்பா…’ என்று மக்களை மறதி நிலைக்கு தள்ளிய டி.ஆரின் புதல்வர் குறளரசன் பற்றி திடீர் நியூஸ். அவர் பாலிவுட்டுக்கு இசையமைக்கப் போகிறாராம்.

இந்த நேரத்தில் அந்த ஞாபகம் வந்து தொலைக்காவிட்டால் நாமென்ன சினிமா ரிப்போர்ட்டர்? ‘இது நம்ம ஆளு’ பட நேரத்தில் பகிரங்கமாக ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்த டைரக்டர் பாண்டிராஜ், “அந்த பையனுக்கு மியூசிக் போடவே தெரியலங்க. ட்ரெய்லர் பி.ஜி.எம்ல ஒரே ஒரு கரெக்ஷன் போடச் சொன்னேன். இந்தா வர்றேன்னு போனாரு. இன்னும் கரெக்ஷன் போட்றாரு. ஒரு பாட்டு பாக்கியிருக்கு. அதை கேட்டா ஆறு மாசமா இழுக்கடிக்கிறார். இவரை வச்சுகிட்டு என்னத்தை பாட்டு கம்போஸ் பண்ணி, என்னத்தை மியூசிக் ரிலீஸ் பண்றது?”

அதே குறளரசனைதான் வருந்தி அழைத்திருக்கிறது பாலிவுட்! பாம்பே முட்டாய் பாண்டிபஜார்ல விற்கறதில்லையா, அது மாதிரி பாண்டி முட்டாய் பாம்பேய்ல விற்கட்டுமே?

இதற்கப்புறமும் எவனாவது ருசிய பற்றி பேசினீங்க?

Read previous post:
களை கட்டிய பேட்ட! முக்கிய விஐபி ஆப்சென்ட்!

Close