லட்சுமி ராமகிருஷ்ணனின் ஓரவஞ்சனை! இன்டஸ்ட்ரி எரிச்சல்!

தவுலுக்கு வலிக்குமேன்னு தடவிக் கொடுத்துட்டு நாதஸ்வரத்தை மொத்தினா இசையா வரும்? இம்சைதான் வரும்! அப்படிதான் ஆகிவிட்டது லட்சுமிராமகிருஷ்ணனின் ஓரவஞ்சனையான கோபம். ஆபத்து ஆத்திரம் வந்தால் ஜனங்களை மகிழ்விப்பதற்காக, லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?’வை எடுத்துவிட்டுக்கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி. ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமலிருந்த லட்சுமிராமகிருஷ்ணன் பொறுக்க முடியாத சுச்சுவேஷனில் பொங்க ஆரம்பித்தார். “நான் செஞ்சுகிட்டு இருக்கறது சேவை. சமுதாயத்துக்கு இப்போ அது தேவை. அதை போய் விமர்சனம் பண்றது தப்பு” என்றெல்லாம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

அப்படியிருந்தும் சினிமாக்களிலும், சக டி.வி. ஷோக்களிலும் அன்றாடம் வறுபடுவது லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘சொல்வதெல்லாம் உண்மை’தான். சமீபத்தில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும், லட்சுமிராமகிருஷ்ணனை மீம்ஸ் பண்ணியிருந்தார்கள். இதற்கெல்லாம் காரணமான டைரக்டர் ராஜேஷை விட்டுவிட்டார் லட்சுமி. இவரைப்போலவே மேக்கப் போட்டுக் கொண்டு இவரை மீம்ஸ் பண்ணிய ஊர்வசியை விட்டுவிட்டார். ஐயோ பாவம்… அதில் நடித்த ஆர்.ஜே.பாலாஜியை பிடித்துக் கொண்டார் லட்சுமி.“அறிவிருக்கா? சென்ஸ் இருக்கா? பாக்கெட் இருக்கா? பட்டன் இருக்கா?” என்று தாறுமாறாக ட்விட்டரில் வந்து தாக்கு தாக்கென தாக்கிவிட்டார்.

இத்தனைக்கும் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை ஆர்ஜே.பாலாஜி. அதுவே அவர் மீது சிம்பதியை ஏற்படுத்திவிட்டது ரசிகர்கள் மத்தியில். “ஏம்மா… உங்களை கிண்டல் பண்ணி நடிச்ச ஊர்வசியை விட்டுட்டு, ஓரமா போன இவரை இழுத்து வச்சு ஏசுறீயே… நீயெல்லாம் நல்லாயிருப்பியா?” என்று சாபம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாக நடுவில் புகுந்த டைரக்டர் ராஜேஷ், யார் மனசையாவது நான் புண்படுத்தியிருந்தா மன்னிருங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கூச்சலோடு கூச்சலாக ஜி.வி.பிரகாஷிடம் கதை சொல்ல நேரம் வாங்கிவிட்ட லட்சுமி ராமகிருஷ்ணனின் சாமர்த்தியத்தை என்னவென்று பாராட்டுவது?

https://youtu.be/NgJ9_kjmFhU

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கெஸ்ட் ரோல்ல நடிப்பேன்! ஆனால் ஒரு கண்டிஷன்! விஜய்சேதுபதி புது ரூட்!

விஜய் சேதுபதி போல மலிவு விலையில் மதுக்கடை திறந்தவர்கள் தமிழ்சினிமாவில் யாரும் இருக்கப் போவதில்லை. இவர் வந்தால், தியேட்டரே மதுக் குடித்த மந்தி போலாகிவிடுகிறது என்பதை அறிந்த...

Close