ரெண்டு பொண்டாட்டிக்காரன்! சைல்ட் அப்யூசர்! யாரை சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்?

வலை தளம் இப்போது கொலை தளம் ஆகிக் கிடக்கிறது. கடவுள் இருக்கான் குமாரு படத்தால், சினிமாவுலகத்திற்குள் சரியான குடுமிப் பிடி! ஒருபுறம் இப்படம் பம்பர் ஹிட் என்று மார் தட்டிய ஜி.வி.பிரகாஷை மறைமுகமாக போட்டுத் தாக்கிவிட்டார் சிம்பு. இன்னொரு பக்கம் தனது நிகழ்ச்சியை கலாய்த்த ஆர்ஜே.பாலாஜியை தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரது திட்டுக்கு பதிலே சொல்லாமல் இருந்த பாலாஜி, ஒருவழியாக தனது மவுனத்தை கலைத்துவிட்டார்.

நான் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகன். இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். ‘எ பிலிம் பை பாலாஜி’ என்று வரும்போது அதில் குறையிருந்தால் பதில் சொல்வேன் என்று கூறிவிட்டார். பாலாஜிக்கு ஆதரவாக நிறைய பேர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் வக்காலத்து வாங்கியதால், கடும் கோபத்திற்கு ஆளான லட்சுமி, ட்விட்டரை விட்டே கிளம்பிவிட்டார். போவதற்கு முன் அவர் போட்ட ட்விட்தான், வலையுலகத்தின் வைரல் ஆகிக் கிடக்கிறது.

“ரெண்டு பொண்டாட்டிக் காரனும் சைல்ட் அப்யூசரும் சொன்னா, கிண்டல் பண்ணினா, ஷோ பண்ணாம இருக்க மாட்டோம்” இதுதான் லட்சுமிராமகிருஷ்ணனின் ஆத்திர ஆத்திரமான ட்விட். இதையடுத்து அந்த ரெண்டு பொண்டாட்டிக்காரன் யார்? பாலாஜியா, ஜி.வி.பிரகாஷா, அல்லது படத்தின் டைரக்டர் ராஜேஷ்ஷா? என்று மைக்ராஸ்கோப் கண்ணோடு அலைகிறது ஒரு கூட்டம். அதிலும் அவர் சொன்ன அந்த சைல்ட் அப்யூஸ் ஆசாமி யார் என்பதுதான் பெரும் கேள்வியாகிவிட்டது.

மூஞ்சுறுன்னு நினைச்சு, முதலை மேல கைய வச்சுட்டீங்களேய்யா…!

https://youtu.be/_yLUCX3h4XM

1 Comment
  1. திரைப்பிரியன் says

    இது லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு தேவை இல்லாத வேலை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Yuvan Gives Shock To Kodambakkam.

https://youtu.be/YpA2LXqQjh0

Close