ரஜினிக்கு லாரன்ஸ் காட்டிய நன்றி விசுவாசம் இப்படியா இருக்கணும்?

மனித நேயர், மக்கள் பண்பாளர் என்றெல்லாம் ராகவேந்திரா லாரன்ஸ் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் ரஜினியால்தான் அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை அவரும் மறந்திருக்க மாட்டார். அவரை அறிந்தவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சினிமா ஆபிசில் கார் துடைத்துக் கொண்டிருந்தவரின் டான்ஸ் திறமையை அறிந்த ரஜினி, அவருக்கு தன் சொந்த செலவில் டான்சர் யூனியனில் கார்டு எடுத்துக் கொடுத்து, தனது தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் சங்கத்தில் சேர்த்தும் விட்டார். மெல்ல வளர்ந்து ஆலமரமாகி நிற்கும் லாரன்ஸ் குறித்து ரஜினிக்கும் மகிழ்ச்சிதான்.

காஞ்சனாவின் பொல்லா பொல்லா கலெக்ஷனுக்கு பிறகு, ரஜினியிடமே கால்ஷீட் கேட்ட லாரன்ஸ் “எத்தனை கோடி வேணும்னாலும் சம்பளம் கேளுங்க தர்றேன். ஆனால் ஒன்று… அந்த படம் என்னோட பேனர்ல தயாரிக்கிற படமா இருக்கணும்” என்று கண்டிஷன் வைத்ததாகவும் ஒரு பேச்சு இருக்கிறது கோடம்பாக்கத்தில். அதோடு “படத்தில் நானும் ஒரு ஹீரோவாக நடிப்பேன்” என்றும் அடம் பிடித்தாராம். இதெல்லாம் சில மாதங்களுக்கு முன் நடந்த கதை. போகட்டும்… இப்போது என்னவாம்?

அண்மையில் வேலூரில் ரஜினிக்காக அவரது ரசிகர்கள் ஓன்று கூடி மனிதநேய மாநாடு ஒன்று நடத்தினார்கள் அல்லவா? அதை நடத்திய வேலூர் ரவி, சமீபத்தில் ரஜினியை சந்தித்தாராம். அப்போது இந்த நிகழ்ச்சி பிரமோஷனுக்காக சில வார்த்தைகள் பேசித்தரும்படி லாரன்சிடம் கேட்டதாகவும் அவர் தங்களை இங்கு வா அங்கு வா என்று பல நாட்கள் அலைகழித்ததாகவும் கூறினாராம். அதற்கு ரஜினியின் ரீயாக்ஷன்?

அண்ணாந்து வானத்தை பார்த்து சிரித்ததை தவிர அவர் வேறென்ன செய்திருக்கப் போகிறார்? எல்லாம் அவன் செயல்!

1 Comment
  1. லாரன்ஸ் அப்படி செய்திருக்க சான்சே கிடையாது என்றே சொல்லுவேன் !

    இது அவருக்கு வேண்டாதவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Atti – Audio Launch Stills

Close