சிநேகிதிகளை தேட வைத்த மகளிர் மட்டும்! சூர்யா ஆபிசில் குவியும் கடிதக் குவியல்கள்?

மகளிர் மட்டும் படம் சமுதாயத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது? சூர்யாவின் 2D நிறுவனத்தின் பக்கம் காதை கொடுத்தால், தகவல் இப்படி வருகிறது. இது மட்டுமல்ல, ஏராளமான கடிதக்குவியல்கள் வருகின்றனவாம். எல்லாம் தன் சிறுவயது தோழியை தேடுவதாகதான்…

மகளிர் மட்டும் படத்தை பார்த்த திருமதி . வசந்தி என்ற பெண்… படத்தில் வருவது போல தன்னுடைய மற்ற இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்து தரமுடியுமா ?? என்று 2D Entertainment நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்… இது மகளிர் மட்டும் படம் பார்த்த பெண்கள் பலர் தங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை நேரில் சந்திப்பதற்காக தேடிவருகிறார்களாம்.

மகளிர் மட்டும் படத்தில் வருவது போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக சேர்ந்த தோழிகள் மூவர் உள்ளனர் . அவர்கள் மகளிர் மட்டும் படத்தை பார்த்ததும் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே படத்தில் சில காட்சிகள் வந்ததால் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர். அவர்கள் தயாரிப்பாளர் சூர்யாவை தொடர்பு கொண்டு ” மகளிர் மட்டும் ” போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். சூர்யா அவர்கள் இதை போன்ற தரமான படங்களை தயாரிக்க வேண்டும். மகளிர் மட்டும் எமோஷனலாக எங்கள் மனதை தொட்ட படம் .

இதை போன்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் 2D நிறுவனத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சூர்யா மகளிர் மட்டும் போன்ற ஒரு தரமான படத்தை தயாரித்தர்க்காக மகிழ்ச்சியாக உள்ளார். மகளிர் மட்டும் படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். படத்தில் வருவது போல தங்களுடைய தோழிகளை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் அந்த கடிதங்களில் எழுதி வருகிறார்களாம்.

https://youtu.be/1XXUMVGdGek

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எதிர்கால மத்திய அமைச்சர் குஷ்பு குஷ்புவே நமஹ 10 -ஸ்டான்லி ராஜன்

Close