காதலிக்கிறதா, கடல போடுறதா? அதிர வைக்கும் ஒரு செல்போன் படம்!
காதலிக்கிறதுக்கு பொண்ணு இருக்கோ, இல்லியோ? கடலை போடுறதுக்கு செல்போன் இருந்தா போதும் என்கிற மனேபாவம் இன்றைய யூத் களில் பலருக்கும் இருக்கிறது. இதையெல்லாம் மனசில் கொண்டு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் திம்மம்பள்ளி சந்த்ரா. படத்தின் பெயர் ‘கைபேசி காதல்’. த.சக்திவேல் தயாரித்திருக்கும் இந்த படம் திரைக்கு வந்தால், சந்துல பொந்துல சைட்ல எரவானத்துல ஒட்டிக்கொண்டிருக்கிற ஆன்ட்டி சினிமா அரசியல் கட்சிகளெல்லாம் கூட கொந்தளித்துக் கிளம்பினால் ஆச்சர்யமில்லை. ஏன்?
படத்தில் கதாநாயகன் செல்போனுக்கு தாலியே கட்டி விடுகிறார் என்பதால்தான்! என்னய்யா இப்படியொரு கலாச்சார சீரழிவு என்றெல்லாம் மற்றவர்கள் கூக்குரல் இடுவதற்கு முன்பே, சந்த்ரா தனது நியாயத்தை கூறிவிடுகிறார். என்னவென்று? முன்னெல்லாம் காதல் தோல்வி வந்தா சம்பந்தப்பட்ட பொண்ணு மேல ஆசிட் வீசுறது. கொல பண்றதுன்னு இருந்தது வாலிபர்கள் அப்ரோச். ஆனால் இந்த படத்தில் காதல் தோல்வி இருந்தாலும், தன் காதலுக்கு காரணமானது செல்போன்தானே? அதை என்ன செய்கிறார் அவன் என்பதுதான் படத்தின் நாட் என்கிறார்.
ஹலோ மை டியர் ராங் நம்பர். கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் என்றெல்லாம் தொலைபேசி வழியே காதலை கண்டுபிடித்த தமிழ்சினிமாதான் இது. அதையெல்லாம் தாண்டி அட்வான்சாக ஒரு அதிர்ச்சி முடிவை கொடுக்கப் போகிறார் திம்மம்பள்ளி சந்த்ரா.
படம் முடிஞ்சு வெளிவரும்போது அவரவர் செல் போன்களை தூர எறியுறாங்களோ, துடைச்சு வச்சுக்குறாங்களோ, அது படம் சொல்லும் மெசேஜில் இருக்கிறது. கிரண், அர்பிதா, மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி என்று பலரும் நடித்திருக்கிறார்கள்.