பேக் டூ பேக் ரஜினி! பிதுக்கும் லைகா?

இன்றைய தேதிக்கு ரஜினி கேட்கிற 100 கோடி சம்பளத்தை கொடுக்கிற தைரியமும், தெம்பும் இரண்டே நிறுவனத்திற்குதான் இருக்கிறது. ஒன்று லைகா. இன்னொன்று தாணுவின் கலைப்புலி நிறுவனம். தர்பார் படப்பிடிப்பை தாம் தூம் என்று நடத்தி வருகிற அதே நேரத்தில், லைகாவின் இன்னபிற படங்கள் சைலன்ட் மோடில் இருக்கிறது. ஏன்? மொத்த பணமும் தர்பாரில் குவிக்கப்பட்டுள்ளதால்தான்.

இருந்தாலும் தேர் இழுத்தவனின் கை அடுத்த திருவிழா வரைக்கும் விறுவிறுப்பாகவே இருக்குமல்லவா? அப்படியொரு விறுவிறுப்புக்கு தயாராகிவிட்டது லைகா. யெஸ்… உங்க அடுத்த படமும் எங்களுக்குதான் என்று துண்டு போடுகிறதாம். காதலிக்காவிட்டால் விஷம் குடிச்சுடுவேன் என்று மடக்குகிற காதலன் போல சற்றே அத்துமீறி அவஸ்தை படுத்துவதாகவும் கேள்வி.

நடுவில் சிறுத்தை சிவா ரஜினிக்கு கதை சொல்லி அவரது நம்பிக்கையை பெற்றிருக்கிறார். அந்த படத்தை தனக்கு செய்து தரச் சொல்லி ஆஃபர் வைக்கிறாராம் தாணு.

ரஜினியின் மனசுக்குள் லைகாவா? தாணுவா? என்கிற பட்டிமன்றம் நடந்து வருவதால், முழு ரிசல்ட் கேட்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை கைப்பற்றிவிட துடிக்கிறாராம் தாணு.

பதவி செய்யுற உதவியை பாட்டித் தாத்தா கூட செய்ய மாட்டாங்க! பார்க்கலாம்…

1 Comment
  1. AJITH says

    REAL COLLECTION KING ONE & ONLY SUPER STAR RAJINI.
    LONG LIVE OUR EVER GREEN STYLE KING RAJINI
    NEXT CHIEF MINISTER OF TAMIL NADU IS OUR BELOVED THALAIVAR RAJINI

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிரிப்புச் சித்தன் மறைந்தான்!

Close