தெலுங்கில் பாட்டு! லிரிக் என்ஜினியருக்கு சறுக்கல்!
ஆரம்பத்தில் கவிதை சித்தாளாக இருந்து, பின்பு கவிதை கொத்தனாராக உயர்ந்து, அதற்கப்புறம் இன்னும் இன்னும் வளர்ந்து லிரிக் என்ஜினியர் ஆனார் மதன் கார்க்கி. சினிமா பாடல்களில் புதுமைகள் பல படைத்த விதத்தில், அப்பாவுக்கு தப்பாத ‘மகன்’ கார்க்கியாகவும் ஆகியிருந்தார் இந்த மதன் கார்க்கி.
பாகுபலி படத்திற்கு தமிழ் வசனம் எழுதிய வகையில், குடும்ப பெருமையை நிலை நிறுத்தியவரை சும்மாவிடுமா சான்றோர்கள் உலகம்? “வாங்க… தெலுங்குலேயும் ஒரு பாட்டு எழுதலாம்” என்று அழைக்க… இன்விடேஷனுக்குள் இடியை வைத்திருப்பார்கள் என்றே அறியாமல் ஓடினார் கார்க்கி. மெனக்கெட்டு மெனக்கெட்டு தெலுங்கு வார்த்தைகளை தேடிப் போட்டவருக்கு செம சறுக்கல்.
“நம்ம லாங்குவேஜுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க. நாங்க வேற லிரிக் கொத்தனாரை பார்த்துக்குறோம்” என்று கூறிவிட்டார்களாம் அங்கே.
நட்ட இடத்திலெல்லாம் முளைக்கறதுக்கு நம்மாளு என்ன நொன்னாக்கா செடியா?
https://www.youtube.com/watch?v=G0liiQAzt7s