மோசடிக்காரரின் கட்டுப்பாட்டில் ரஜினி? சந்தேகம் கிளப்புது புலனாய்வு இதழ்!

மலேசியாவை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது ரஜினியின் வருகை! தன் மீது ரசிகர்களும் மக்களும் வைத்திருக்கும் அன்பை கண்டு திக்குமுக்காடி வருகிறார் ரஜினி. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கிடைக்காத பெரும் பேறு அவரையே தெய்வமாக கருதும் மலேசிய ரசிகர்களுக்கு தாராளமாக கிடைக்கிறது. திறந்த வேனில் நின்று கொண்டு சாலையில் இரு மருங்கிலும் நிற்கும் ஜனங்களுக்கு கைகளை ஆட்டி தரிசனம் தருகிறார். படப்பிடிப்புக்கு போகும் போதும் சரி, வரும்போதும் சரி. தனக்காக காத்திருக்கும் ரசிகர்கள் சிலரிடம் வண்டியை நிறுத்தி பேசுகிற அளவுக்கு சகஜமாக இருக்கிறார் அவர்.

இந்த சந்தோஷத்தில் சற்றே புகையடித்த மாதிரி ஒரு செய்தி இன்று வெளியாகியிருக்கும் ஜுனியர் விகடன் இதழில் வந்திருக்கிறது. மலேசியாவில் ஹவாலா மோசடி புகாரில் சிக்கியிருக்கும் பிரபலம் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறாராம் ரஜினி. அவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கிறதாம் மலேசியாவில். அந்த பிரபலத்தின் 20 பாடி கார்டுகள்தான் ரஜினிக்கும் தற்போது பாடி கார்டுகளாக இருந்து அவரை பாதுகாக்கிறார்களாம். அதே போல ரஜினியுடன் இருக்கும் இன்னொருவர் மீது கொலை வழக்கும் பதிவாகியிருக்கிறதாம். இப்படிப்பட்ட மனிதர்களை ரஜினிக்கு அருகில் அனுமதித்தது எப்படி? என்று அச்சப்பட்டிருக்கிறது ஜுவி.

ரஜினிக்கு அவர்களை பற்றியெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர்களை இவரோடு இணைத்து வைத்தவர்கள் யாரோ? அவர்களுக்கு கைமேல் கிடைத்த பலன்கள் என்னவோ? ஆராய வேண்டிய அவசியமான நேரம் இது!

 

 

 

 

3 Comments
 1. அறிவழகன் says

  இறைவனை நேரில் கண்ட பரவசம்.
  சூப்பர் ஸ்டார் ரஜினியின் செல்வாக்கு இந்த வையகம் அறிந்த ஒன்று.,
  வாழ்க நான் வணங்கும் தெய்வம் எம்மான் ரஜினி அவர்கள்
  வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே

 2. Radha Ravi says

  தலைவா வயசானாலும் உங்கள் ஸ்டைல் மட்டும் உங்களை விட்டு எப்பவும் போகாது. சுமார் அரை மணி நேரம் அட்டையை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தேன்.
  இது தான் சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்.

 3. தமிழ்ச்செல்வன் says

  என்னை பொருத்த வரையில், மனித தெய்வம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உலக மக்களின் தலைவர் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சூப்பர் ஸ்டார் அவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த மக்களை கவர்ந்து விடுவார். அந்த அளவிற்கு அவர் தெய்வாம்சம் மிக்கவர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Trishaa Latest Stills

Close