போட்டுக் கொடுக்காத மேனேஜர்! பொறி கலக்கிய மிசஸ் மியூசிக்!

திடீர் ஹீரோவாகிவிட்ட மியூசிக் டைரக்டருக்கு இப்போது கையில் ஏழெட்டு படங்கள்! மார்க்கெட்டில் ஓரளவுக்கு வியாபார அந்தஸ்தும் வந்துவிட்டதால், அவரை எப்படியாவது மடக்கிப் போட்டு இயக்குனராகிவிட வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டமே கதை சொல்லக் காத்திருக்கிறது. உதவி இயக்குனர்களின் ஆசை இப்படியிருக்க, அவருடன் கூடவே நடித்த நடிகை ஒருவருக்கும் இவரை மடக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

அதற்காக குடும்பத்தில் குண்டு வைக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. மியூசிக் ஹீரோவுக்கு மார்க்கெட் இருக்கும் போதே அவரை ஒட்டிக் கொண்டு நாலு காசு பார்த்துவிடலாம் என்பதுதான் நோக்கம். நெருக்கமாகவும் ஆனந்தமாகவும் இவர் பழகி வருவதை மிசஸ் மியூசிக் விரும்பவில்லை. அவ்வப்போது கணவரை எச்சரித்து வந்தாலும், எந்நேரமும் பின்னாலேயே போய் கண்காணிக்க முடியாதல்லவா? அதற்காகதான் மேனேஜரிடம் சொல்லி, அவ்வப்போது நடமாட்டத்தை தெரிவிக்கும்படி கூறியிருந்தாராம். சமீபத்தில் இரண்டு ஹீரோயின்கள் சகிதம் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனார் மியூசிக். கூடவே மேனேஜரையும் அனுப்பி வைத்தார் திருமதி.

ஆனால் போன இடத்தில் நடந்த எதையும் போட்டுக் கொடுக்கவில்லையாம் மேனேஜர். அவரிடமிருந்து ஒரு தகவலும் வராதததால் பொறுமையிழந்த மிசஸ், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் தகவல்களை ஆபரேட் பண்ணுவதற்கு இன்னொருவரை பிடித்துவிட்டார். காதில் விழுந்ததெல்லாம் கச்சாமுச்சா களேபரம்ஸ்…

இவ்ளோ நடக்குது. நமக்கு சொல்லாம விட்டுட்டாரே என்று காத்திருந்தவர், படக்குழு சென்னை திரும்பியதும் செய்த முதல் வேலையே மேனேஜரை நீக்கியதுதான். “விசுவாசமா இருக்கணும். ஆனா யாருக்குன்னு தெரியலையே?” என்று புலம்பி வரும் மேனேஜர், மீண்டும் தேன் கூட்டைக் கைப்பற்ற பெரும் முயற்சி செய்கிறாராம்.

வெங்காயத்தை உரிச்சா விதையா கிடைக்கும்? கள்ளக்காதல் பண்றவய்ங்ககிட்ட வேலை பார்த்தா இப்படியெல்லாம்தான் நடக்கும்!

To listen the audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Indra Kobai Movie Stills Gallery

Close