கல்யாண பத்திரிகை கடைசிவரைக்கும் வரலயே? கவலைப்பட்ட மனோபாலா!
நாற்பதாண்டு கால நட்பை நடிகர் சங்கத் தேர்தல் வந்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கிடுச்சேப்பா? பின்னே என்னவாம்?
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்தே நடிகை ராதிகாவின் பெஸ்ட் பிரண்டு மனோபாலா. கிழக்கே போகும் ரயில் படத்தின் போதெல்லாம் ராதிகாவுக்கு தமிழும் வராது. நடிப்பும் வராது. ஒரு வாத்தியார் போல பாரதிராஜா அடித்தார் என்றால், சகோதரன் போல சொல்லிக் கொடுத்தவர் மனோபாலா. அதற்கப்புறம் அதே ராதிகாவை தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்து ஒருசேர வளர்ந்தவர் மனோபாலா. அது மட்டுமா? ராதிகாவின் ராடன் டி.வி நிறுவனத்தில் சில சீரியல்களை இயக்கியும் இருக்கிறார் அவர். மனோபாலா தயாரித்து வரும் பாம்பு சட்டை என்ற படத்தின் முதல் தயாரிப்பாளரே ராதிகாதான்.
இப்படி இவருக்கும் அவருக்குமான நட்பு, ஒன்றரை ரூபா சர்பத் இல்லை. அது கனவிலும் வாய்க்காத பேரமுதம்! அப்படிப்பட்ட ராதிகாவின் மகளுக்கு கல்யாணம். இந்த நிமிஷம் வரைக்கும் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாராம் மனோபாலா. ஏன்? இன்விடேஷன் வருமான்னுதான்!
ஒரு சின்ன புன்னகை எவ்வளவு பெரிய பூட்டையும் உடைத்துவிடும் என்பதை அறியாதவரா இருவரும்? இறங்கி வாங்க சண்டைக் கோழிகளா!
To listen the audio click below ;-