என்னா நடிகன்டா இவன்? விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ!
ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு ஆந்திராவிலும் அதே நிலைமை வந்திருப்பது, நமக்கெல்லாம் ஆறுதல். ரீமேக்கும் இல்லாமல் டப்பிங்கும் செய்யாமல், ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா விஷால் படங்களை ஆந்திராவிலும் அப்படியே மொழி மாற்றாமல் வெளியிட்டு கொள்ளை லாபம் சம்பாதித்து வருவது, அந்தந்த நடிகர்கள் மீது அண்டை மாநில ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பின் அடையாளம்.
இன்னும் அந்த கட்டத்திற்கு செல்லவில்லை விஜய் சேதுபதி. ஆனால் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த தர்மதுரை பற்றிக் கேள்விப்பட்டு அதை பார்க்க வேண்டும் என்று விரும்பினாராம் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான வெங்கடேஷ். அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டதாம். படத்தை பார்த்து வியந்ததை விட, விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து அசந்தே போனாராம் வெங்கடேஷ்.
என்னா நடிகன்யா இந்தாளு…? இவர் மட்டும் இந்த படத்தில் இல்லேன்னா, இப்படியொரு படத்தை உருவாக்கியிருக்கவே முடியாது என்றெல்லாம் வாய் திறந்து பாராட்டியிருக்கிறார். சம்பந்தப்பட்ட இடத்தில் விஜய் சேதுபதி இல்லாவிட்டாலும், அவரது காதுக்கு விஷயம் போகுமல்லவா?
என்ன செய்தார் அவர்? படு ஸ்மார்ட்டாக ஒரு சிரிப்பு சிரித்தாராம்! அதுலதான்யா விழுந்து கிடக்கிறான் ரசிகன்!
To listen the audio click below ;-
To listen the audio click below ;-