மனுஷியா நீ? ஹீரோயினை கடிந்து கொண்ட மனுஷனா நீ டைரக்டர்!

பிப்ரவரி 16 ந் தேதி திரைக்கு வரப்போகிறது மனுஷனா நீ! (இப்படியொரு பேரு வச்ச டைரக்டருக்கு நாலா புறத்திலிருந்தும் ‘நச நச’ போலிருக்கிறது) மெடிக்கல் கிரைம் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தாறுமாறாக புரமோஷன் வேலைகளை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கஸாலி தலைமையில் ஒரு எலும்புக்கூடு ஊர்வலத்தையே நடத்திவிட்டார்கள். அட… இதென்னய்யா கொடுமை? யெஸ்… படத்தில் வண்டி வண்டியாக கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், நிஜத்திலும் சொல்லக் கிளம்பிய கஸாலிக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் செம மரியாதை. (அட… இது ஒரிஜனல் மரியாதைங்க…) ‘தலைக்கவசம் அணியுங்கள்’ என்ற வேண்டுகோள் வாசகம் அடங்கிய பேனர்கள், துண்டு பிரசுரங்களோடு இந்த எலும்புக்கூடு மனிதர்களின் ரேலியையும் நடத்தி அசத்திவிட்டார் கஸாலி. போலீஸ் அதிகாரிகளே ஆர்வத்தோடு முன் வந்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டது தனி அப்ளாஸ்.

இவ்வளவு நல்ல வேலைகள் செய்யும் கஸாலிக்கு அவர் படத்தின் ஹீரோயினாலேயே அநியாயத்துக்கு சங்கடம். அனு கிருஷ்ணா தவிர்த்து மனிஷா கவுர் என்ற மலேசியா நடிகையையும் நடிக்க வைத்திருக்கிறார். ஆள் முக்கால், ஆடை கால் என்கிற விகிதாச்சாரத்தோடு நடித்துத் தள்ளியிருக்கும் மனிஷா கவுரையும் சென்னைக்கு வரவழைத்து இந்த ரேலியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் ஹேர் டிரஸ்சர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன், இவர்களுடன்தான் வருவேன். ஸ்டார் ஓட்டலில் ரூம் புக் பண்ணுங்க என்றெல்லாம் அழிச்சாட்டியம் காட்டிய மனிஷா, லிஸ்ட்டை மேலும் நீட்டிக் கொண்டே போக, ‘மனுஷியா நீ. வைம்மா போனை’ என்று துண்டித்தாராம் கஸாலி.

முயல்னு நினைச்சா, முள்ளம் பன்றியா இருக்குதேங்க!

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் யாரை கை காட்டுகிறாரோ? அவர்தான் அடுத்த சி.எம்! பிரபல ஆன்மீக வாதியின் பிடிவாத’ ப்ரடிக்ஷன்!

Close