திங்கட் கிழமை சென்சார்! பாய்ச்சல் காட்டும் வேதாளம்! படத்தை வாங்கிய பிரபலம்?

தீபாவளிக்கு வராது என்று முணுமுணுக்கப்பட்ட வேதாளத்தை வேக வேகமாக தட்டி எழுப்பிவிட்டார் அஜீத். தீபாவளிக்கு வந்தேயாகணும் என்கிற அவரது ஆசையை நிறைவேற்ற மின்னல் வேகத்தில் செயல்பட்ட டைரக்டர் சிவா, வெற்றி பாயின்ட்டை தொட்டேவிட்டாராம். ராப் பகல் பாராமல் போஸ்ட் புரடக்ஷன் வேலையை சிவா செய்ய, தன் உடைந்த காலையும் பொருட் படுத்தாமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தாராம் அஜீத்.

ஒரு முக்கிய செய்தி. படத்தின் சென்னை நகர விநியோகத்தை ஜாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆளுங்கட்சியின் மிக உயர்ந்த இடத்திலிருக்கும் ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் இது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, படத்தின் சேட்டிலைட் உரிமையும் ஜெயா தொலைக்காட்சியே வாங்கியிருக்கிறதாம்.

இதையடுத்து ரிலீஸ் தேதியும் தீபாவளி திருநாள் என்று முடிவு செய்யப்பட்டு மிக வேகமாக அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும். இந்த தீபாவளிக்கு என்ன வெடி ஸ்பெஷல்னு அஜீத் ரசிகர்களிடம் கேட்டுப் பாருங்களேன்… சொல்வார்கள்!

1 Comment
  1. தமிழரசன் says

    அஜித் தான் ஒரு மலையாளி என்பதை பலமுறை நீருபித்து விட்டான். ஆனால் சில ஊடகங்களும், சில முட்டாள் ரசிகர்களும் தான் அந்த தருதல பின்னால் உள்ளனர். உண்மையான தமிழர்கள் அவன் படத்தை பார்க்க வேண்டாம்.
    வாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Apoorva Hot in Red Saree Photo Gallery

Close