நா.முத்துகுமார் இடம்! மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்?

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.முத்துகுமாரின் தோழனாகிவிட்ட இயக்குனர் ராம், யுவன் -நா.மு காம்பினேஷனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.

தனக்கு விருது கொடுத்து கவுரவித்த ஆனந்தவிகடன் மேடையிலேயே ‘நா.முத்துகுமாருக்கு ஏன்யா விருது கொடுக்கலே?’ என்று சண்டைப்போட்ட இந்த சாக்லெட் தோழர், அவரில்லாத சினிமாவை எப்படி எதிர்கொள்வார்?

சின்ன வயதிலேயே இந்த உலகத்தை விட்டுப் போன கவிஞர் நா.முத்துகுமாரை திரையுலகம் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்ளும் என்றாலும், ராம் நிறையவே நினைக்கிறார். ‘பேரன்பு’ படத்தில் நா.முத்துகுமார் இல்லையே என்கிற கவலை அவரை வாட்டி எடுப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று அந்த விழா மேடையிலேயே சொன்னவரை நோக்கி ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ரசிகர்கள்.

“ஆமாம்… அவரு இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். அதற்காக யானைக்கு போர்த்திய அம்பாரியில வடகம் காய வச்சுட்டீங்களே வாத்யாரே…” என்கிறார்கள் அவர்கள்.

ஏன் இப்படி புலம்பணும்?

வேறொன்றுமில்லை. இந்தப்படத்தில் நா.முத்துகுமார் எழுதுகிற அளவுக்கு வெயிட்டான ஒரு பாடலை இயக்குனர் ராமின் மனைவி சுமதியே எழுதிவிட்டாராம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு?

Close