நாச்சியார் ரைட்டர்! நாலா திசையிலும் வெல்கம்!

‘நாச்சியார்’ படத்தை பார்த்த ரசிகர்கள், ஆரம்பத்தில் கடந்து போகும் ஒரு டைட்டிலை கவனித்திருப்பார்களா தெரியாது. ‘மூலக்கதை- ராஜா கருணாகரன்’ என்று டைட்டில் கிரடிட் கொடுத்திருப்பார் இயக்குனர் பாலா.

திருவல்லிக்கேணி பகுதியில் குடியிருந்த ராஜா கருணாகரன், அதே பகுதியில் பணியாற்றிய ஒரு முஸ்லீம் இனத்தை சேர்ந்த பெண் காவல் அதிகாரியின் பராகிரமத்தை நேரில் பார்த்து பிரமித்து போனதாகவும், அப்போது நடந்த சம்பவங்களைதான் கதையாக எழுதி பாலாவிடம் சேர்ப்பித்தார் என்றும் கூறுகிறார்கள். என்ன சவுகர்யத்துக்காவோ முஸ்லீமை இந்துவாக்கிவிட்டார் பாலா.

போகட்டும்… நாச்சியார் படத்தின் சென்னை நகர வசூல் மட்டும் இரண்டு கோடியை எட்டிவிட்டதாம். அதுமட்டுமல்ல… திரையிடப்பட்ட எல்லா ஏரியாவிலேயும் நல்ல மகசூல். (அதற்கு காரணம், பின்னால் வந்த படங்கள் எல்லாம் செம ஜவ்வு) வெற்றிப்படம்… அதுவும் வேறொரு இயக்குனரின் கதையை வைத்துக் கொண்டு. கடந்த ஒரு வாரமாக ராஜா கருணாகரனை வலைபோட்டு தேடிய கோடம்பாக்கம், வாய்ப்பு மேல் வாய்ப்புகளை அள்ளித் தருகிறதாம்.

‘பாலா கை நிறைய பணம் கொடுத்து கஷ்டம் தீர்த்தார். வாழ்க்கை முழுக்க வசதிகளை கொடுத்து வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது நாச்சியாரின் வெற்றி. எல்லா புகழும் முதல் சந்திப்பிலேயே கதையை ஏற்றுக் கொண்ட பாலாவுக்குதான்’ என்று நெகிழ்கிறாராம் ராஜா கருணாகரன்.

பின்குறிப்பு- யூ ட்யூபில் தேடியதில் ராஜா கருணாகரன் எழுதிய இன்னொரு குறும்படம் சிக்கியது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க ரசிகர்களே, இதோ லிங்க்-
https://www.youtube.com/watch?v=JvlUuiZt7HY&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆசை மாறிப்போன தோசை ஜோடி!

https://www.youtube.com/watch?v=8-xE9qhC0JE&t=80s

Close