ஆர்யா வேட்டையில் அகப்பட்ட வரலட்சுமி! தப்பு பண்றீங்களே நட்பு?
எப்படியோ… ஆர்யாவை இல்லற பந்தத்தில் தள்ள நடந்த முயற்சி, இப்போது ஒரு டி.வி சேனலின் கைக்கு வந்திருக்கிறது. கலர்ஸ் டி.வி என்று தமிழகத்தில் லாஞ்ச் ஆகியிருக்கும் இந்த புதிய டி.வியின் ரேட்டிங் ஆசை, ஆர்யாவின் டேட்டிங் ஆசையோடு ஒத்துப்போனதால், ஆர்யாவுக்கும் குஷி. அவரை புக் பண்ணிய டி.வி நிறுவனத்திற்கும் குஷி.
சுமார் ஒரு டஜன் பெண்களை ஆடிஷன் செய்து, அவர்களை ஆர்யாவோடு பழக விடுகிறார்கள். அப்படி பழகும் ஆர்யா, அவர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாராம். அப்புறம் அந்த கல்யாணம், சம்பந்தப்பட்ட சேனல் வளாகத்திலேயே நடைபெறும். அதை லைவ் டெலிகாஸ்ட் பண்ணுகிற திட்டத்திலும் இருக்கிறது சேனல்.
உங்க சேவையை அப்படியே விஷால் மேலேயும் திருப்பி, அவருக்கும் ஒரு கால் கட்டு போட ட்ரை பண்ணுங்க என்று கேட்க நினைத்த திரையுலகத்திற்கு ஒரு பேரதிர்ச்சி. யெஸ்… நிகழ்ச்சிக்கு விஷாலின் எதிர்காலம் என்று நம்பப்பட்ட வரலட்சுமியும் வந்திருக்கிறார். ஆனால் ஆர்யாவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு.
நிகழ்ச்சிப் போகிற போக்கை பார்த்தால் இந்த வரலட்சுமி ஆர்யாவின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த பெண்களில் ஒருவராக இருப்பாரோ என்கிற சந்தேகம் வருகிறது. இருந்தாலும், சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது என்று மனசை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
அடுத்த வாரத்துல என்ன குண்டுய்யா போடப் போறீங்க?