தயாரிப்பாளர் சங்கம் குறட்டை! தனி ஆளாக சாதித்த தயாரிப்பாளர்!
‘திருட்டு விசிடியை ஒழிப்போம்’ என்று ஒவ்வொரு கவளம் சோறு உண்ணும்போதும் முழங்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், உடல்நிலை காரணமாக ஆப்சென்ட்! (இருந்தாலும் ஒன்றும் நடந்திருக்காது, அது வேறு) இதற்கு முன் கையும் களவுமாக அகப்பட்ட தியேட்டர் ஒன்றின் மீது எப்படி நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இன்டஸ்ட்ரி அறிந்ததுதான்.
பெரிய படங்களுக்கும் மெகா பட்ஜெட் படங்களுக்கும் மட்டுமே செவி சாய்க்கும் ஆக்ஷன் ராஜாக்கள், சின்னப்படம் என்றால்… ‘உன் படத்தை ஏன்யா திருட்டு விசிடி எடுத்தான்? சிடி போட்ட செலவு கூட தேறாதே?’ என்று கிண்டலடித்த கதையெல்லாம் இங்கு உண்டு. தற்போதும் அப்படியொரு சம்பவம் நடக்க… ஏழைக்குரல் சபையில் ஏறாது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் கஸாலி தானே முன் நின்று திருட்டு விசிடி எடுத்த தியேட்டர்காரர்களை பிடித்து போலீசில் கொடுத்ததுடன், புரஜக்டர், கம்ப்யூட்டர், கேமிரா போன்ற உபகரணங்களையும் பறிமுதல் செய்ய உதவியிருக்கிறார்.
குற்றம் நடந்தது என்ன?
அண்மையில் வெளிவந்த ‘மனுஷனா நீ’ படம் ஆன்லைனில் வெளிவர ஆடிப்போய் விட்டார் கஸாலி. உடனே தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு புகார் மனு கொடுத்தவர், அது எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்கிற விபரத்தையும் க்யூப் மூலம் அறிந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். வழக்கம் போல அங்கே மவுனம்தான் பதில்.
வேறு வழியில்லாமல் ‘ஜுனியர் விகடன்’ இதழை நாடியவர், தனக்கு உதவுமாறு கேட்க… அங்கிருந்து துவங்கியது ஆக்ஷன் போர். கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில்தான் அப்படம் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இருந்தது. மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் விஷயத்தை கொண்டுபோன ஜுனியர் விகடன், அவர்கள் உத்தரவின் பேரில் தியேட்டர் அதிபரையும் திருட்டு விசிடி எடுக்க உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வைத்திருக்கிறது.
எந்த தியேட்டரில் திருட்டு விசிடி எடுக்கப்பட்டாலும் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்கிற அறிவியல் அனுகூலம் தெரிந்த பின்பும் இதுபோன்ற கயவர்களை விட்டு விட்டு வெற்று முழக்கம் எழுப்புகிறவர்களுக்கு கஸாலியின் ஆக்ஷன், சிறிய அளவில் வெட்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அது வெற்றிதான்.
மனுஷனா நீ படத்தை இயக்கிய மிஸ்டர் கஸாலி… நீ மனுஷன்யா!
madathu perusu kushiya sridevi pinnadiye poi seinthuruchu polarukku! sorgamalya ponathu thaana