விஷாலின் எனிமி க்கு வெற்றிமாறன் சப்போர்ட்! கலை கலையா முந்திரிக்கா!

சினிமாவில் மட்டும்தான் சாதியும் கிடையாது, மதமும் கிடையாது (என்பார்கள்). ஆனால் அந்த நம்பிக்கையும் சமீபகாலமாக கெட்டுக் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. இப்போதெல்லாம் அசிஸ்டென்ட் டைரக்டர்களை வேலைக்கு சேர்த்தால் கூட, ‘தம்பி நம்ம ஆளா?’ என்று கேட்கிற வழக்கம் வந்துவிட்டது. போகட்டும்… சினிமாவுக்கு சாதி மதம் கிடையாது என்கிற நம்பிக்கை இருந்தாலும், படம் எடுப்பவருக்கோ தயாரிப்பவருக்கோ எதிரிகள் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.

நடிகர் விஷால் விஷயத்தில் எப்போதும் கொதி நிலையிலேயே இருக்கிற வழக்கம் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சிக்கு உண்டு. படபடவென்று பேசுவதிலும், திடுதிடுவென்று போராடுவதிலும் ‘முரட்டு ஆசாமி’ என்ற பெயரை வாங்கிவிட்டாலும், ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி தமிழ்சினிமாவின் புருவத்தை உயர வைத்துவிட்டார் இந்த சுரேஷ் காமாட்சி. பாராதிராஜா, சேரன் உள்ளிட்ட தமிழ்சினிமாவின் முன்னணி படைப்பாளிகள் பலரும் இந்தப்படத்தை ஸ்பெலாக பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் வெற்றி மாறன்.

படத்தை பார்த்தவுடனேயே ‘ஆஹா… பிரமாதம்’ என்றவர், ‘இந்தப்படத்தை என் கம்பெனியே வாங்கி ரிலீஸ் செய்யும்’ என்கிற உத்தரவாதத்தை கொடுத்துவிட்டார். வெற்றி மாறனே இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றவுடன், சுரேஷ் காமாட்சி மீது இன்டஸ்ட்ரி வைத்திருந்த முரட்டு ஆசாமி இமேஜ் மெல்ல மாற ஆரம்பித்திருக்கிறது.

‘எப்படியும் படத்தை ரிலீஸ் பண்ணுறதுக்கு வெளி வட்டாரத்துக்கு வந்துதானே ஆகணும். அப்ப அணை கட்றோம் பார்த்துக்க…’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த சு.காவின் எனிமிகள், வெற்றிமாறனின் முடிவுக்கு பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

நல்லவேளை… கலைக்கான மரியாதை இன்னும் நாசமாகாமல் இருக்கிறதே…. அந்தளவுக்கு நிம்மதி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தயாரிப்பாளர் சங்கம் குறட்டை! தனி ஆளாக சாதித்த தயாரிப்பாளர்!

Close