நயன்தாரா மீது மர்ம நபர்கள் தாக்குதல்? கோடம்பாக்கத்தில் பரபரப்பு!
கடந்த சில தினங்களாகவே சூடாகிக் கிடக்கிறது ஏரியா! “நிஜமாவே அடிச்சுட்டாங்களா…?” என்று சிலரும், “நள்ளிரவுல அபார்ட்மென்ட்ல புகுந்து அடிச்சுருக்கானுங்கப்பா …” என்று சிலரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, “இருக்கும்… ஆனா இல்லாமலும் இருக்கும்” என்கிற சந்தேகத்தோடு விசாரணையை தட்டி விட்டது நிருபர் கூட்டம். பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கிடைத்த செய்தி இதுதான்.
கோயம்பேட்டில் ஒரு பிரபலமான அபார்ட்மென்ட்டில்தான் தங்கியிருக்கிறார் நயன்தாரா. சில தினங்களுக்கு முன் அவரது வீட்டுக்கதவை தட்டிய மர்ம நபர்கள் சிலர், அவரது முகத்திலும் கைகளிலும் பலமான குத்துகள் விட்டதாக கூறப்படுகிறது. வந்த இளைஞர்கள் பெரிய இடத்து பிள்ளைகளாக இருப்பார்கள் என்பதாலும், விவகாரம் நடிகை சம்பந்தப்பட்டது என்பதாலும் அபார்ட்மென்ட் வாசிகள் அவரவர் வீட்டு கதவை சாத்திக் கொண்டு முடிந்தவரை திருட்டுத்தனமாகவே இந்த கூத்தை கவனித்ததாகவும் கூறப்படுகிறது. என்ன காரணத்தாலோ, நயன்தாராவும் போலீசுக்கு போகவில்லை.
இது குறித்து நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ் என்பவரிடம் கேட்டால், “அப்படியெதுவுமே நடக்கலைங்க. மேடம் ஐதராபாத்ல இருக்காங்க. அவங்க ஷுட்டிங்குக்கு போய் ஒரு வாரம் ஆச்சு” என்கிறார் படு ஸ்டிராங்காக!
ஏற்கனவே வாடியிருந்த ஒரு ரோஜாச் செடி மீண்டும் துளிர் விட ஆரம்பித்ததாகவும் அது பொறுக்காமல் விடப்பட்ட குத்துதான் இவை என்றும் மேலதிக தகவல்களை பரப்பி வருகிறது சூடானத் தகவல் பரப்புவோம் சங்கம்!