அறம் 2 கன்பார்ம்! பச்சைக் கொடி காட்டிய நயன்தாரா
அறம் படத்தில் கலெக்டர் வேலையை உதறித் தள்ளிவிட்டு, கம்பீர நடை நடப்பதோடு கதையை முடித்துவிட்டார் டைரக்டர் கோபி நயினார். அப்புறம் அப்புறம்? இந்த கேள்வி நயன்தாராவின் ரசிகர்களுக்கு இருக்குமல்லவா? தன் ரசிகர்களின் கேள்விக்கு சைலன்ட்டாக பச்சைக் கொடி காட்டிவிட்டார் அவர்.
கோபி நயினாரை அழைத்து, ‘அறம் பார்ட் 2 வேலைகளை ஆரம்பிங்க’ என்று கூறிவிட்டாராம். அறம் கதையை முதன் முதலாக சொல்லிவிட்டு வெளியே வந்த நேரத்தில், அங்கு கால்ஷீட்டுக்காக காத்திருந்த சுமார் ஒரு டசன் தயாரிப்பாளர்களை பற்றி பேசிய நயன், ‘இவ்ளோ பேரும் அட்வான்சோட காத்திருந்தாலும், என் மனசுல மணியடிக்கிற கதையில்தான் நான் நடிக்கிறேன். இனிமேலும் அப்படிதான் நடிப்பேன்’ என்றாராம். இந்த முறையும் தனது மீது நயன்தாரா வைத்திருக்கும் நம்பிக்கையை பிரகாசப் படுத்த வேண்டும் என்கிற முடிவோடுதான் இருக்கிறார் கோபி நயினார்.
நடுவில் சித்தார்த் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கும் கோபி நயினார், அறம் 2 கதையையும் சேர்த்தேதான் அசை போட்டுக் கொண்டிருக்கிறாராம் இப்போதெல்லாம்.
நயன்தாராவுக்கு போடுற அரசியல் மேடையாக இருக்குமா அறம் ரெண்டு?