தப்பித்தது நே.கொ.பா! பிக்ஸ் ஆன வியாபாரம்!
அஜீத் இதில் கெஸ்ட் ரோல்தான் என்று பிங்க் படத்தை பார்த்து முடிவெடுத்த விநியோகஸ்தர்கள், ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழ ரேஞ்சுக்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அணுகியதுதான் காலத்தின் கழிச்சடை டேஸ்! யாவாரத்திற்கு வந்தவர்களின் மனநிலை புரியாமல், உச்சாணிக் கொம்பில் நின்றபடியே ரேட் பேச ஆரம்பித்தார் தயாரிப்பாளர் போனிக்கபூர். 70 கோடி, 80 கோடி என்று
ஒருகட்டத்தில் எல்லா கதவுகளும் அடைக்கப்பட, அஜீத் படத்திற்கே இந்த நிலைமையா? என்கிற அளவுக்கு கப்சிப் ஆனது நிலைமை. இருந்தாலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு சுமார் 50 கோடிக்கு இப்படத்தின் தென்னக உரிமையை பெற்றது ஜெமினி பிலிம் சர்க்யூட். கடலளவு சொத்து சுகங்கள் இருந்தாலும், அசையா சொத்துதானே அதெல்லாம்? இந்த ஐம்பது கோடியை புரட்டுவதற்குள் நாக்கு தள்ளிப் போய்விட்டது அந்த நிறுவனத்திற்கு
நம்ம சொத்தோடு ஒப்பிட்டால் 2 பர்சென்ட் கடன்தான் இருக்கு. அதை அடைக்கலேன்னா மானம் போயிடும் என்று வாரிசுகள் முடிவெடுக்க… ஐதராபாத்திலிருக்கும் ஒரு விலை உயர்ந்த சொத்தை விற்க முடிவெடுத்து அட்வான்ஸ் வாங்கியதாம் ஜெமினி. அப்பறமென்ன? மளமளவென அக்ரிமென்ட்டுகள் வேகம் எடுத்தன.
நேர்கொண்ட பார்வை இன்னும் வியாபாரம் ஆகவில்லை. படம் திட்டமிட்ட தேதியில் வருமா? என்றெல்லாம் கிசுகிசுத்த சினிமா ஏரியா, நேற்றிலிருந்தே தன் வாயை இறுக்க மூடிக் கொண்டது. இப்படியெல்லாம் நடக்கும். படம் எப்படியும் தியேட்டருக்கு வரும் என்று நம்பியிருந்த அஜீத், நடுவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று ஜாலியாக இருந்த கதைதான் ஊரே அறியுமே!
[…] post தப்பித்தது நே.கொ.பா! பிக்ஸ் ஆன வியாபார… appeared first on New Tamil […]