திடீர் திருப்பம்! காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட் சொன்ன போனிக்கபூர்!
சிலந்தி வலைக்குள் சிக்கிய சின்ன கொசு போலாகி கடும் கன்பியூஷனுக்கு ஆளாகிவிட்டார் போனிக்கபூர். தமிழ்நாட்டுல வந்து தறி ஓட்றதுன்னா அவ்வளவு ஈஸியா என்று நிமிஷத்துக்கு நிமிஷம் அவருக்கு திகில் கொடுத்துக் கொண்டே இருந்தது ஊர். அவரும் நீ வேணா… நீ பரவால்ல… நீ வேஸ்ட்… என்று ரகம் ரகமாக பதில் சொல்லியே நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரத்தை தள்ளிப் போட்டு வந்தார்.
நிறைந்த அமாவாசையான நேற்று, பேசிய தொகையில் பாதியை கொடுத்து அக்ரிமென்ட்டை வாங்கிப் போவதாக சொல்லியிருந்ததாம் ஜெமினி பிலிம் சர்க்கியூட். இவருக்காக ஒரு பிரபல பைனான்சியர் பத்து கோடி பணத்துடன் சென்னைக்கும் வந்திருந்தார். பட்… காலத்தின் கோலம், கடைசி நேரத்தில் நீ வேணாம் போ… என்று ஜெமினிக்கு கதவை சாத்திவிட்டார் போனிக்கபூர். (ஒருவகையில் ஜெமினி கழற்றப்பட்டதும் நல்லதே என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்)
திடீரென உள்ளே நுழைந்த மூன்று விநியோகஸ்தர்கள் நேர்கொண்ட பார்வையின் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் உரிமையை பெற்றுவிட்டார்கள். இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் போனிக்கபூர். எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசன், ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகிய மூவரில் இருவர் இந்த தொழிலில் பழம் தின்று கொட்டையை போட்டு அந்த கொட்டையையும் தின்று செரிக்கிற அளவுக்கு வித்தைக்காரர்கள்.
கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ஜெமினியின் சாபமும், தினந்தோறும் ஒரு முடிவாக எடுத்த போனிக்கபூரின் மனநிலையும் நேர்கொண்ட பார்வைக்கு என்னென்ன ரூட்டுகளை காட்டப் போகுதோ?