ஒளி படைத்த குஷ்புவே வா…வா…! தயாரிப்பாளர் சங்கத் தலைவர் போட்டியில் புது திருப்பம்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து தாணு செய்த நன்மைகள் என்ன? கூடி கூடி வடிகட்டினாலும் பெரிசாக ஏதுமில்லை என்று கண்ணை கசக்க ஆரம்பித்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். இருந்தாலும் அவரது பின்னணியில் சிலர் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இணங்க, டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக போட்டியிடுகிறார். இவருக்கு முழு சப்போர்ட் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். ஏற்கனவே செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த போட்டியில் ஒரு பல பரீட்சையும் இருக்கப் போவதில்லை. சர்வசாதாரணமாக டி.ஆர் வென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட குஷ்பு களத்தில் குதிக்கப் போகிறாராம்.

சட்டென்று மாறுது வானிலை ஆகிவிட்டது அத்தனையும். குஷ்பு நினைத்தால், சர்வசாதாரணமாக வருங்கால முதல்வர் சசிகலாவை சந்தித்துவிட முடியும். அதுமட்டுமல்ல… கருத்துக்களை சொல்வதில் துணிச்சல், கொண்ட கொள்கையில் அழுத்தமான முடிவு, எல்லாவற்றுக்கும் மேல் உளறிக் கொட்ட மாட்டார் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு, குஷ்புவின் வரவை கொண்டாட தயாராகிவிட்டது ஒரு குரூப். இதில் வேடிக்கை என்னவென்றால், குஷ்புவை களத்தில் இறக்கிவிட்டதே விஷால்தான்.

சினிமா வருமானம் பல வழிகளில் வர வாய்ப்பிருந்தும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தயாரிப்பாளர்களை தவிக்க விட்ட சங்கத்திற்கு, குஷ்பு வந்தாவது விடிவு காலம் வருமா? அல்லது டிஆரின் அடுக்குமொழிதான் மிஞ்சுமா? விறுவிறுப்போடு காத்திருக்கிறது எலக்ஷன் தேதி!

https://youtu.be/gh77abOduLQ

1 Comment
  1. Roja says

    Kushboo good choice. Opinion varies but she is a Sensible speaker. So Kush vs Radhika vs tr

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மோ விமர்சனம்

Close